சமூக வலைதளங்களில் எப்போதும் விலங்குகள் அல்லது பறவைகள் தொடர்பான வீடியோக்கள் வேகமாக வைரலாகி விடும். தற்போது மயில் ஒன்று வீட்டின் மாடியில் இருந்து பறக்கும் வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “டெல்லியில் இந்தப் பகுதியில் நான் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். எப்போதும் இங்கு மே இறுதியில் மயில்கள் வருவது வழக்கம். அந்தவகையில் நேற்று என் வீட்டிற்கு அருகில் மயில் வந்தது” எனக் கூறி ஒரு பதிவை செய்துள்ளார்.
அந்தப் பதிவில் மயில் ஒன்று ஒரு வீட்டின் பால்கனியிலிருந்து மற்றொரு வீட்டிற்கு பறக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை பலரும் பார்த்து வியந்து வருகின்றனர். அத்துடன் பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். இந்த வீடியோவை தற்போது வரை 4.8 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் காலத்தில் மயில்கள் தங்களுடைய இனபெருக்கத்தை தொடங்கும். அந்தவகையில் தற்போது மயில்களின் இனபெருக்க காலம் நடைபெறுகிறது. இந்த சமயத்தில் மயில்கள் தன்னுடைய தோகையை விரித்து நடனமாடி மற்ற மயிலை கவரும் வகையில் செய்வது வழக்கம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்