டெல்லியில் உள்ள சேரிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள கட்டணம் விதித்து அறிவிப்பு வெளியிட்ட நிறுவனத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


வறுமை சுற்றுலா:


வறுமை சுற்றுலா என்ற கருத்தாக்கம் காலங்காலமாக இருந்து வருகிறது. மக்கள் சேரிகளில் சுற்றுப்பயணம் செய்து, வறுமை மற்றும் சமூகத்தால் பின் தங்கியவர்களின் வாழ்க்கையை தெரிந்து கொள்கின்றனர்.






சமீபத்தில், ஒரு நிறுவனம் டெல்லி சேரிப்பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விளம்பரத்தை வெளியிட்டது. அந்த விளம்பரத்தில், சுற்றுப்பயணம் மேற்கொள்ள கட்டணமாக ரூ.1,800 அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு தொடர்பான ஸ்கிரீன்சாட்டை ட்விட்டரில் பகிர்ந்து பலரும் பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். மக்கள் வசிக்கும் இடம் என்ன சுற்றுலாத்தளமா என சிலர் கொதித்தெழுந்துள்ளனர்


இது தொடர்பாக ட்விட்டர் பயனாளர் ஒருவர், வறுமையிலிருந்து முதலாளித்துவத்தினர் லாபம் பார்க்கின்றனர் என தெரிவித்துள்ளார்.






மற்றொருவர், நீங்களே சென்று இலவசமாக பார்த்துவிட்டு வாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.






செல்வாக்கு மிகுந்த கலாச்சாரத்தை தெரிந்து கொள்ளுங்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.






தாராவி மும்பை போல் சுற்றுலா என்றும், வறுமை விற்பனைக்கு என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.