இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. அதன் பிறகு படிப்படியாக கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததன் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு சுழற்சி முறையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது பொதுத்தேர்வுகள் நடத்த அட்டவணையும் வெளியிடப்பட இருக்கிறது.
இந்தநிலையில், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் தலைத்தூக்க தொடங்கியுள்ளது. டெல்லியில் இன்று மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 517 ஆக பதிவாகியுள்ளன, இது நேற்றை விட 12% அதிகம். கடந்த ஆண்டு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5.33 சதவீதத்தில் இருந்து 4.21 சதவீதமாக குறைந்தது.
இந்த ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதிக்குப் பிறகு புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகி வருகிறது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
டெல்லியில் மொத்தமாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,518 ஆகும். இது இந்த ஆண்டு மார்ச் 3 க்குப் பிறகு மிக அதிகமான பதிவு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 15 நாட்களில் 'COVID நெட்வொர்க் பரவல்' 500 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பைக் குறிக்கிறது என்று கணக்கெடுப்பை நடத்திய நிறுவனமான LocalCircles தெரிவித்துள்ளது. கடந்த 15 நாட்களில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் தங்களுடைய நெருங்கிய நட்பில் இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்