நாட்டின் தலைநகர் டெல்லியில் அமைந்துள்ளது ராம் மனோகர் லோகியா மருத்துவமனை. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மற்றும் சப்டார்ஜூங் மருத்துவமனைக்கு பிறகு டெல்லியின் மிகப்பெரிய மருத்துவமனையாக ராம்லோகியா மருத்துவமனை அமைந்துள்ளது.
அறுவை சிகிச்சை மையத்தில் குரங்கு:
இந்த மருத்துவமனையின் தினசரி ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 7-ந் தேதி இந்த மருத்துவமனையில் நிகழ்ந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 7-ந் தேதி இந்த மருத்துவமனையில் உள்ள மூளை அறுவை சிகிச்சை மையத்தில் பெரிய குரங்கு ஒன்று உள்ளே புகுந்தது.
அறுவை சிகிச்சை மையத்தின் உள்ளே குரங்கு திடீரென உள்ளே புகுந்ததை கண்ட மருத்துவமனை ஊழியர்கள். நோயாளிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த அறையில் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில், திடீரென குரங்கு எவ்வாறு உள்ளே நுழைந்தது? என்று குழப்பத்தில் திகைத்தனர்.
வைரலாகும் வீடியோ:
இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் அந்த குரங்கை விரட்ட முயற்சித்தனர். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்தார். ஊழியர்கள் குரங்கை விரட்ட முயற்சித்தபோது குரங்கு அங்குமிங்கும் ஓடியதை கண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர். அதிர்ஷ்டவசமாக மருத்துவமனைக்குள் நுழைந்த குரங்கு யாரையும் தாக்கவில்லை.
குரங்கு எவ்வாறு உள்ளே நுழைந்தது என்று தெரிவிக்கப்படவில்லை. அதேசமயம், மருத்துவமனை தரப்பில் இந்த வீடியோ பழைய வீடியோ என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மிகப்பெரிய மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறையில் குரங்கு நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் நோயாளிகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக குரங்கு உள்ளே நுழைந்த சமயத்தில் அறுவை சிகிச்சை ஏதும் நடைபெறவில்லை.
மேலும் படிக்க: Khalistan: 12 நாள்களில் ஜி-20 உச்சி மாநாடு.. டெல்லியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் விஷம செயல்.. பாதுகாப்பில் குளறுபடியா?
மேலும் படிக்க: Dengue Fever: ஒவ்வோர் ஆண்டும் தொடரும் உயிரிழப்புகள்; டெங்கு தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துக- அன்புமணி