டெல்லியில் கணவர், மனைவி தம்பதியினர் ஒன்றாக சேர்ந்து மது குடித்து உள்ளனர். பின்னர், மனைவியிடம் கணவர் சாப்பிடுவதற்கு உணவு கேட்டுள்ளார். ஆனால், மனைவி உணவு அளிக்க மறுத்ததை அடுத்து இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில், மனைவியை கணவர் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மனைவி இறந்தது தெரியாமல் அவர் இறந்த உடலுடன் படுத்துறங்கியதாக காவல்துறையினர் தெரித்துள்ளனர். அடுத்த நாள், மனைவி கொலை செய்யப்பட்டு கிடந்தது அவருக்கு தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து, அவர் 40,000 ரூபாய் பணத்துடன் தப்பி ஓடியுள்ளார். இருப்பினும், அவரை தேடி கண்டு பிடித்து, டெல்லியில் உள்ள வேறொரு இடத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட நபரின் பெயர் வினோத் குமார் துபே என்றும் அவருக்கு வயது 47 என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சுல்தான்பூரில் அவர் வசித்து வருகிறார். வெள்ளிக்கிழமை காலை 9:20 மணிக்கு துபே தனது 39 வயது மனைவி சோனாலியை வாக்குவாதத்தின்போது அடித்து தலையணையை முகத்தில் போர்த்தி கொலை செய்துவிட்டதாக காவல்துறையினருக்கு தொலைபேசியின் மூலம் ஒருவர் தகவல் கொடுத்தார்.
தொலைபேசியில் தகவல் கொடுத்தவரிடமும் அந்த பகுதியில் வசித்து வரும் குடியிருப்பாளர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். குற்றம்சாட்டப்பட்டவர் எங்கிருக்கிறார் என்பதை அறிந்து கொண்டு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, பை ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், 43,280 ரூபாய் பணம், இரண்டு மது பாட்டில்கள், ரத்த கரை படிந்த தலையணை ஆகியவை இருந்ததாக தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை இரவு, கணவரும் மனைவியும் ஒன்றாக சேர்ந்து மது குடித்ததையும் அவர் மனைவியிடம் உணவு கேட்டு அதை தர அவர் மறுத்ததையும் துபே ஒப்பு கொண்டுள்ளார். இதையடுத்து, அவர்களுக்கிடையே வாக்குவாதம் வெடித்ததும் அவர் மனைவியை அறைந்ததும் அவர் வாக்குமூலம் அளித்ததன் மூலம் தெரியவந்துள்ளது. இதில், கோபமடைந்த அவர், மனைவியை கொலை செய்துள்ளார். பணத்தை எடுத்து கொண்டு டெல்லியிலிருந்து அவர் தப்பி ஓட முயற்சித்தார். ஆனால், அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு, அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்