நாட்டில் உள்ள பல மாநிலங்களில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. டெல்லியிலும் அங்குள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கிழக்கு டெல்லியில் உள்ள விஹார் பகுதியில் அமைந்துள்ளது அரசு சர்வோதய பால வித்யாலயா பள்ளி. இந்த பள்ளியிலும் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த பள்ளியில் அதே பகுதியில் உள்ள திரிலோக்புரி அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேருக்கும் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, திரிலோக்புரி அரசுப் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்களும் அரசுப் பள்ளிக்கு வருகின்றனர்.




இந்த நிலையில், தேர்வின்போது சர்வோதயா பால வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தங்களிடம் வம்பிழுத்த மாணவர்களை தாக்குவதற்காக தேர்வு முடிந்த பிறகு, அரசுப்பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்திற்கு வெளியில் காத்திருந்தனர். தேர்வு முடிந்து மாணவர்கள் ஒவ்வொருவராக வெளியேறியபோது, தங்களிடம் வம்பிழுத்த சர்வோதயா பள்ளி மாணவர்களை பார்த்ததும், அவர்களை அரசுப்பள்ளி மாணவர்கள் துரத்த ஆரம்பித்தனர்.


அரசுப்பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்களும் கையில் கத்தியுடன் துரத்தியதால், சர்வோதயா பள்ளி மாணவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடினர். பயத்தில் அவர்கள் அருகில் இருந்த பூங்காவிற்குள் தப்பிக்க நுழைந்தனர். ஆனால், அங்கும் விடாமல் துரத்திச் சென்ற அரசுப்பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்களும், சர்வோதயா பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்களை சரமாரியாக கத்தியால் குத்தினர்.




சம்பவ இடத்தில் இருந்த சிலர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்து கிடந்த 4 மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் இரண்டு மாணவர்களுக்கு அதிகளவில் ரத்தம் வெளியேறியதால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


மேலும், இந்த சம்வம் தொடர்பாக பாண்டவ நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் மாணவர்களை கத்தியால் குத்தியது அரசுப்பள்ளி மாணவர்கள்தான் என்பதை உறுதி செய்தனர். காயமடைந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண