டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், இன்று பிற்பகலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் சுமார் 2 மணி அளவில் டெல்லியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியானது. அப்போது சில இடங்களில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர்.
இது குறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவிக்கையில், இந்த நிலநடுக்கமானது நேபாளத்தின் அருகே 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, டெல்லியில் உணரப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பல்வேறு தரப்பினரும் தங்களது, வீடுகளில் காற்றாடி அசையும் வீடியோ, பாத்திரங்கள் நகரும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.