இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஒமிக்ரான் தொற்றும் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக பல்வேறு மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை மீண்டும் அறிவித்து வருகின்றன.






இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,”எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனக்கு லேசான அறிகுறிகள்தான் உள்ளது. இதனால் வீட்டில் என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண