எக்ஸ்பிரஸ் ரயிலில் மனைவியை தள்ளிவிட்டுவிட்டு எதுவுமே தெரியாததுபோல தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்ற கணவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சிசிடிவியில் பதிவாகியுள்ளது.


மகாராஷ்டிராவில் உள்ள பல்ஹார் மாவட்டத்தில் இந்த ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது. பல்ஹார் மாவட்டத்தில் உள்ள வாசிசாலை ரயில் நிலையத்தில் இரவு நேரத்தில் கணவர் ஒருவர் தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் நடைமேடையில் காத்திருந்துள்ளார். இரவு நேரம் என்பதால் மனைவி நடைமேடை அருகே தூங்கிவிட்டார். அப்போது எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று மிக வேகமாக வரவே, உடனடியாக மனைவியை எழுப்பிய கணவர் வேகவேகமாக அவரைப்பிடித்து ரயில் முன்னே தள்ளிவிடுகிறார். ரயிலின் வேகத்தில் மோதி படுகாயமடைந்த மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவியை கொலை செய்துவிட்டு அவசரம் அவசரமாக எதுவுமே நடக்காததுபோல தன்னுடைய இரு குழந்தைகளை அழைத்துக்கொண்டு கொலையாளி வேகவேகமாக நடையைக் கட்டுகிறார். 






இந்த சம்பவம் அனைத்தும் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சிசிடிவியை வைத்து விசாரணை மேற்கொண்ட ரயில்வே போலீசார் கொலையாளி வேறொரு ரயிலில் ஏறி செல்வதைக் கண்டுபிடித்தனர். மனைவியை கொன்ற கணவனைப்பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்


இது குறித்து தெரிவித்த போலீசார், வாசிசாலை ரயில் நிலையத்தின் 5வது ப்ளாட்பாரத்தில் அந்த அம்மா தன்னுடைய குழந்தைகளுடன் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரை தூக்கத்தில் இருந்து எழுப்பிய கணவர் ரயில்முன்பு அவரை தள்ளிவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அப்பெண் அப்போதே உயிரிழந்தார் என்றார்.