மீண்டும் அதிகரித்த காற்று மாசு:


டெல்லியில் அக்டோபர் மாதத்திற்கு பின் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி வரை காற்று மாசு கொஞ்சம் கொஞ்சமாக டெல்லியில் அதிகரித்துக்கொண்டே செல்லும். பொதுவாக காற்றின் தரத்தை அளக்கும் அமைப்பானது, காற்றின் தரக் குறியீடு 50 என்றிருந்தால் அது நல்ல நிலைமை, 100 முதல் 101 என்றளவில் இருந்தால் திருப்திகரமான தரம், 101 முதல் 200 வரை இருந்தால் அது மிதமானது, 201 முதல் 300 வரை இருந்தால் அது மோசமான தரம், 301 முதல் 400 வரை இருந்தால் மிகவும் மோசமான தரம், 401 முதல் 500 என்றிருந்தால் அதிபயங்கர மோசம் என்று நிர்ணயித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு டெல்லியில் காற்றின் தரன் 400க்கு மேல் இருந்தது. சுவாசு கோளாறுகள் உட்பட, ஆஸ்துமா தொடங்கி நுரையீரல் புற்றுநோய் வரை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு காற்றின் தரம் அங்கு மோசமாக இருந்தது. 


400ஐ கடந்த காற்று மாசு:


இதனால், பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு இல்லாமல், வீட்டில் இருந்து பணிபுரிய டெல்லி அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்ட்டிருந்தது.  பின்னர், கடந்த சில நாட்கள் காற்றின் தரம் குறைந்ததை அடுத்து, நேற்று பள்ளிகள் வழக்கம் போல செயல்பட தொடங்கியது.  இந்நிலையில், தற்போது டெல்லி சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தரம் இன்று 400ஐ கடந்துள்ளது. 


அதாவது, இன்றைய 9 மணி நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரம் 413ஆக உள்ளது. நேற்று 372 ஆக இருந்த நிலையில், காற்றின் தரம் 413ஆக உள்ளது. மேலும், அசோக் விஹார் போன்ற பகுதிகளில் AQI 405, 447 ஆக பதிவாகியுள்ளது. பவானாவில் 405, துவாரகாவில் 429 ஆக பதிவாகி உள்ளது. அதேபோல, ஆனந்த் விஹாரில் 378 ஆகவும், புராரி கிராசிங்கில் 374 ஆகவும், லோதி சாலையில் 392 ஆகவும் AQI பதிவாகியுள்ளது.  இதற்கிடையில், டெல்லி காற்று மாசு தொடர்பாக  உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.


உச்சநீதிமன்றம் கண்டனம்:


நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவும், சுதான்சு துலியா அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.  நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் கூறுகையில், "கடந்த 6 ஆண்டுகளில் மிகவும் மாசுபட்ட நவம்பராக இம்மாதம் உள்ளது. இதற்கு காரணம் என்னவென்று நன்றாக தெரிகிறது. பயிர்க்கழிவு எரிப்பதை கட்டுப்படுத்துவது உங்கள் டெல்லி மற்றும் பஞ்சாப் அரசுகளின் வேலை தான். அதை எப்பது செய்வது என்று சொல்வது நீதிமன்றத்தில் வேலை அல்ல.  விவசாயிகளின் பிரச்னைகளுக்கு அரசு செவி சாய்ப்பதில்லை. விவசாயிகள் வில்லனாக்கப்பட்டு வருகின்றனர். ஏழை விவசாயிகள் இயந்திரங்கள் வாங்க அரசு நிதி  அளிக்க வேண்டும்" என்று நீதிமன்றம் கூறியது.




மேலும் படிக்க


Vichitra: ரூமுக்கு அழைத்த ஹீரோ.. அடித்த ஸ்டண்ட் மாஸ்டர்.. உதவாத நடிகர் சங்கம்..விசித்ராவுக்கு நேர்ந்த கொடுமை..!