டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட 18 மாத குழந்தையின்  உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. ஹரியானா மாநிலத்தில் உள்ள மேவாட் பகுதியைச் சேர்ந்த குழந்தை மஹிரா. நவம்பர்  6-ம் தேதி அன்று தனது வீட்டின் விளையாட்டிக் கொண்டிருக்கும்போது, பால்கனியில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதனால், தலையில் பலத்த காயமடைந்த மஹிரா, எய்ம்ஸ்  மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டார். எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மஹிரா நவம்பவர் 11-ஆம் தேதி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


2 உயிர்களை காப்பாற்றிய குழந்தையின் உடல் உறுப்பு


மூளைச்சாவு அடைந்த 18 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானது செய்யப்பட்டது. மஹிராவின் பெற்றோருக்கு முதலில் குழந்தையின் உடல் உறுப்பை தானம் செய்ய சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. அதன் பிறகு மருத்தவர்கள் அறிவுறுத்தல் படி, அவர்கள் மூளை மரணம் மற்றும் உறுப்பு தானத்தின் அவசியத்தை புரிந்து கொண்டனர். பின்னர் அவர்கள் தங்களது குழந்தையின் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொண்டனர் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.


பின்பு டெல்லியில் இருக்கும் இன்ஸ்டிடியூட் ஆஃப் லிவர் அண்ட் பிலியரி சயின்சஸில் (ஐஎல்பிஎஸ்) என்ற மருத்துவமனைக்கு அந்த குழந்தையின் கல்லீரல் கொண்டு செல்லப்பட்டது. அந்த மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 6 மாத குழந்தைக்கு கல்லீரல் வழங்கப்பட்டது. அதே நேரத்தில் அவரது இரண்டு சிறுநீரகங்களும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  17 வயது சிறுவனுக்கு வழங்கப்பட்டது. பின்பு அந்த குழந்தையின் கண்கள் மற்றும் இதயம் பிற்கால பயன்பாட்டிற்காக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.


எய்மிஸில் 3-வது குழந்தை


டெல்லி மருத்துவமனையில்   மூளைச்சாவு அடைந்த குழந்தைகளின் உடல் உறுப்புகள் அடுத்தடுத்து தானமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 6 மாதங்களில் மூளைச்சாவு அடைந்த 3 குழந்தைகளின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அதன்படி, முதலாவதாக  இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததை தொடர்ந்து மூளைச்சாவு அடைந்த 6 வயது குழந்தையான ரோலியின் உடல் உறுப்புகள் தானது செய்யப்பட்டது. 6 வயது குழந்தை ரோலியின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் தானது செய்யப்பட்டது.


 அதன்பிறகு தற்போது மூன்றாவதாக  மஹிராவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து மருத்துவர் குப்தா கூறியதாவது, குழந்தைகள் பெரும்பாலும் வீட்டில் உள்ள பால்கனியில் பாதுகாப்பின்றி விளையாடுகின்றனர். இதனால் பல விபத்துக்கள் நேர்ந்துள்ளது. இதனால் குழந்தைகளை இதுபோன்ற உயரமான இடங்களில் செல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியமான ஒன்று என்று தெரிவித்தார்.


கிராமப்புறங்களில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை.  உடல் உறுப்புகள் தானது செய்வதை பலர் மறுக்கின்றனர். இது குறித்து போதுமான விழிப்புணர்வு பலரிடம் இல்லை. பெரும்பாலான குடும்பங்கள் இதுப்பற்றி தெரியாமல், அபாய கட்டத்தில் உள்ள நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற  முன்வருவதில்லை. மேலும், அவர்கள்  உறுப்புகளின் அவசரத் தேவையைப் புரிந்து கொள்ளவில்லை என்று கூறினார். மேலும், இதுகுறித்து போதுமான அளவு விழிப்புணர்வை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.