கேரளாவில் கடைசி நேரத்தில் விழுந்த லாட்டரி சீட்டால், தனது வீட்டை காப்பாற்றிய ஒருவரின் கதை சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


கேரள மாநிலம் மஞ்சேஷ்வர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது பவா (50). இவரது மனைவி அமீனா (45) இவர்களுக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இதில் இரு மகள்களுக்கு திருமணம் நடந்து முடிந்து விட்ட நிலையில், இரு மகள்கள் பள்ளியில் படித்து வருகின்றனர். இதனிடையே கடந்த 8 மாதத்திற்கு முன்னதாக தனது கனவு வீட்டை கட்டிய பவா, தனது மகன் நிசாமுதீனை வேலைக்காக கத்தாருக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்.




மகள்களுக்காக வங்கியில் வாங்கிய 10 லட்சம் ஒரு பக்கம், வீடு கட்ட உறவினர்களிடன் வாங்கிய 20 லட்சம் இன்னொரு பக்கம், மகனை வெளிநாட்டிற்கு அனுப்ப வாங்கிய கடன் வாங்கிய பணம் மற்றொருபக்கம் என எல்லாம் சேர்த்து பவாவை  கிட்டததட்ட 50 லட்ச கடனாளியாக மாற்றிவிட்டது


ஒரு கட்டத்தில் கடனால் தத்தளித்த பவா, தனது வீட்டை விற்று விட்டு தனது இரண்டு மகள்களுடன் வாடகை வீட்டிற்கு குடிபெயர முடிவெடுத்தார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தனது  வீட்டை வாங்க வந்தவர்களிடம் பேரம் நடத்தினார்


இந்தப்பேரத்தில் பவா  45 லட்சத்திற்கு வீட்டை விற்க விரும்புவதாக சொல்ல, வாங்க வந்தவர்களோ வீட்டை 40 லட்சத்திற்கு கேட்டு, மாலை வருகிறோம் என்று சொல்லி சென்றிருக்கிறார்கள்.ஏற்கனவே கடனில் தத்ததளித்து கொண்டிருந்த பவா மாலை வருபவர்களிடம் அவர்கள் எவ்வளவு பணம் கொடுக்கிறார்களோ, அதை வாங்கிவிட்டு பின்னர் வீட்டை கொடுத்து விடலாம் என முடிவெடுத்து இருந்தார். இதனிடையே 1 மணி அளவில் வெளியே சென்ற அவர் 4 லாட்டரி சீட்டுகளையும் வாங்கி இருக்கிறார். 




சற்றும் எதிர்பார்க்காத வகையில் 3 மணியளவில் பவா அதிஷ்டத்திற்கு சொந்தக்காரராக மாறிவிட்டார். ஆம்  லாட்டரியில் அவருக்கு 1 கோடி ரூபாய் பரிசு விழுந்துவிட்டது. வரியெல்லாம் பிடித்துப்போக அவருக்கு 63 லட்சம் கிடைத்துள்ளது. இந்த செய்தியை அறியாத ரியல் எஸ்டேட் புரோக்கர் மாலை 5 மணி அளவில் வீட்டை வாங்க அங்கு வந்திருக்கிறார். ஆனால் பவா தான் வீட்டை விற்கவில்லை என்று கூறிவிட்டார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண