Kerala Rain: கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழையால் ஆலப்புழா, இடுக்கி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. 


மஞ்சள் அலர்ட்:


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கோட்டையம், பாலக்காடு, திருவணந்தபுரம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருவணந்த பகுதியில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 


இதனால் ஆழப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆறு மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று மட்டும் பாலக்காடு மாவட்டத்தின் மன்னார்காடு பகுதியில் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 


வெள்ளப்பெருக்கு, மண்சரிவு:


திரிச்சூர் மற்றும் பாலக்காட்டில் உள்ள அணைகள் நிரம்பியதுடன், ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டதுடன், மண்சரிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பாக எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மரங்கள் சாய்ந்துள்ளன. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 


இதற்கிடையே திருவனந்தபுரத்தில் உள்ள பெப்பாரா அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் பாதுகாப்பு நலன் கருதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. கோட்டயம் பகுதியில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. 


மேலும் படிக்க: Fire Accident: திருச்சியில் இருந்து குஜராத் சென்ற ஹம்சஃபர் விரைவு ரயிலில் தீ விபத்து; இரண்டு பெட்டிகள் எரிந்து நாசம்


Accident: தலைகுப்புற கவிழ்ந்த காய்கறி வண்டி; சாத்தான் குளத்தில் பரபரப்பு; டிரைவருக்கு என்ன ஆச்சு?