தேசிய குற்ற ஆவண காப்பகம் நாட்டில் 2023ம் ஆண்டு நடந்த குற்றச்சம்பவங்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. கொலை, கொள்ளை, விபத்து உள்ளிட்ட பல்வேறு விவரங்களை இதில் வெளியிட்டுள்ளது. இதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டுக்கு அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Continues below advertisement

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு:

2023ம் ஆண்டு இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிராக நடந்த குற்றங்களுக்காக 1 லட்சத்து 77 ஆயிரத்து 335 வழக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த 2022ம் ஆண்டைக் காட்டிலும் 9.2 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த 2021ம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் 1.62 லட்சம் பதிவு செய்யப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு 1 லட்சத்து 49 ஆயிரத்து 404 வழக்குகள் பதிவாகியிருந்தது. 

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் மிகவும் அதிகளவு அதிகரித்துள்ளது. இது சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் வேதனையை உண்டாக்கியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு குழந்தைகள் கடத்தல் வழக்குகள் மட்டும் 79 ஆயிரத்து 884 வழக்குகள் பதிவாகியுள்ளது. அதாவது, இந்த வழக்குகள் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் 45 சதவீதம் ஆகும். போக்சோ வழக்குகள் மட்டும் கடந்த 2023ம் ஆண்டு 67 ஆயிரத்து 694 வழக்குகள் பதிவாகியுள்ளது. 

Continues below advertisement

பாதிக்கப்பட்ட குழந்தைகள் வயது:

குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 6 வயதுக்கு கீழே 762 குழந்தைகளும், 6 முதல் 12 வயதுக்கு உட்பட்ட வயதில் 3 ஆயிரத்து 229 குழந்தைகளும், 12 முதல் 16 வயதில் 15 ஆயிரத்து 444 குழந்தைகளும், 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் 21 ஆயிரத்து 411 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 40 ஆயிரத்து 846 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெரிந்தவர்களாலே பாலியல் வன்கொடுமை:

இதில் மிகவும் வருத்தப்பட வேண்டிய விவகாரமாக பெரும்பாலான போக்சோ வழக்குகள் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்குகள் ஆகும். 40 ஆயிரத்து 434 வழக்குகளில் குழந்தைகளுக்கு எதிரான பாதிப்புகளைத் தந்தவர்கள் அவர்களுக்கு நன்றாக தெரிந்தவர்களே ஆவார்கள். 

குறிப்பாக, 3 ஆயிரத்து 224 வழக்குகள் குடும்பத்தினராலே குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள். 15 ஆயிரத்து 146 வழக்குகளில் குழந்தைகளுக்கு தெரிந்த குடும்ப நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரால் அந்த குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ளது. 

அதிகரிக்கும் கடத்தல்:

குழந்தைகளை அடித்து துன்புறுத்திய வழக்குகளில் 22 ஆயிரத்து 444 வழக்குகள் பதிவாகியுள்ளது. கடத்தல் வழக்குகளில் கடந்த 2023ம் ஆண்டு மட்டும் 82 ஆயிரத்து 106 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 1 லட்சத்திற்கு 18 குழந்தைகள் என்ற விகிதம் ஆகும். இந்த வழக்குகளில் 14 ஆயிரத்து 637 வழக்குகள் சிறுமிகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததற்காக பதிவு செய்யப்பட்டது ஆகும். 

குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் 2023ம் ஆண்டு அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 22 ஆயிரத்து 393 வழக்குகள் பதிவாகியுள்ளது. மகாராஷ்ட்ராவில் 22 ஆயிரத்து 390 வழக்குகள் பதிவாகியுள்ளது. உத்தரபிரதேசத்தில் 18 ஆயிரத்து 852 வழக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் 93.7 சதவீதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் அதற்கு அடுத்தபடியாக 91.3 சதவீதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.