இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தடுக்கும் வண்ணம் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் அதிக அளவில் போடப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி ஜனவரி 3ஆம் தேதி முதல் செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி கடந்த 3ஆம் தேதி முதல் 15-18 வயது சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 15-18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பாக தேசிய சுகாதார திட்டத்தின் இயக்குனர் மற்றும் சுகாதரத்துறை கூடுதல் செயலாளர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 வயதை எட்டும் சிறுவர்களுக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2005,2006 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்களும் 15-18 வயது பிரிவில் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதி உடையவர்கள் என்று தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
15 - 18 வயதுக்கு உட்பட்டோருக்கான கோவாக்சின் தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு https://www.cowin.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதில் சிறார்கள் தங்களது பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டையை கோவின் வலைதளத்தில் பதிவு செய்யும் போது பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் சிறார்கள் தங்கள் ஆதார் உள்ளிட்ட 9 ஐடி கார்டுகளில் ஒன்றை கொடுத்து ரிஜிஸ்டர் செய்ய முடியும். வயதானவர்கால் எப்படி ரிஜிஸ்டர் செய்தனரோ அதேபோல் செய்தால் போதும். அப்பா, அம்மாவின் போன் எண் கொடுத்து ஓடிபி மூலம் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். ஆனால் அதே சமயம் பலரிடம் ஆதார் இருக்காது. 18 வயது குறைவானவர்கள் என்பதால் வேறு அடையாள அட்டை இருக்காது. எனவே இவர்கள் பள்ளி ஐடி கார்டை பதிவேற்றினால் போதும். இதில் அவர்களின் பெயர்கள் மற்றும் 15-18 வயது கொண்டவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் விவரம் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க: சந்தைக்கு வரும் கொரோனா தடுப்பூசிகள்.. விலை என்ன? யார் வாங்கமுடியும்? எங்கு கிடைக்கும்? முழு விவரம்..