கடந்த 24 மணி நேரத்தில் 89,129  பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 81.25 சதவீதம் பேர் மேற்கண்ட 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 47,913 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 77.3% பேர்  மகாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர், கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்கலைச் சேர்ந்தவர்கள்.


நாட்டில் கோவிட் 19 சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 58 ஆயிரத்து 909-ஐ எட்டியுள்ளது.    புனே, மும்பை, நாக்பூர், தானே, நாசிக், பெங்களூரு, அவுரங்காபாத், டெல்லி, அகமதுநகர் மற்றும் நாந்தேட் போன்ற நகரங்கள் மட்டும் 50 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது.  நாட்டின் மொத்த சிகிச்சை பெறுபவர்களில் புனேவில் மட்டும் 10.75 சதவீதம் பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்தியாவில் இதுவரை மொத்தமாக 7.3  கோடி தடுப்பூசிகள் போடப்பட்டன. இதற்கிடையே, கோவிட் நிலைமை குறித்து அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள், காவல் துறை தலைமை இயக்குநர்கள் மற்றும் சுகாதார செயலாளர்களுடன் நடைபெற்ற  உயர்மட்ட ஆய்வு கூட்டத்திற்கு மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமை தாங்கினார்.


தொற்று உறுதியாதல் விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் பரிசோதனைகளை அதிகப்படுத்துதல். மொத்த பரிசோதனைகளில் 70 சதவீதம் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைகளாக இருக்கும் வகையில் கவனம் செலுத்துதல். பரிசோதனை நிலையங்களுடன் தொடர்ந்து ஆய்வு செய்து பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கும் காலத்தை குறைத்தல். மக்கள் தொகை அதிகமுள்ள பகுதிகளில் துரித ஆன்டிஜென் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல். அறிகுறிகள் இருந்தும் துரித ஆன்டிஜென் பரிசோதனைகளில் தொற்று இல்லை என்று வரும் பட்சத்தில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை கட்டாயமாக செய்தல் போன்ற கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன.