மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, கேரளா, டெல்லி, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரவித்துள்ளார்.
நாடு முழுவதும், கடந்த 24 மணிநேரத்தில் 3,17,532 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. நேரத்தில் 2,23,990 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 16.41 சதவிகிதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 16.06 சதவிகிதமாகவும் உள்ளது.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத் துறை செயலாளர் பிரஷாந்த் பூஷன்,"மூன்றாவது அலையில், நாட்டின் இறப்பு விகிதத்தில் தொடர் வீழ்ச்சியைக் காணலாம். தற்போது இறப்பு எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பதற்கு கொரோனா தடுப்பூசிதான் முக்கிய காரணமாகும்.
2021, ஏப்ரல் 30 அன்று,3,86,452 பேர் கொரோனா நோய்த்தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டனர். 3,059 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். அப்போது, முழு தவணை தடுப்பூசி செலுத்தக் கொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் 3% ஆகும். 2022, ஜனவரி 20 அன்று நாட்டின் புதிய பாதிப்புகள் 3,17,532 ஆக இருந்தாலும், இறப்பு எண்ணிக்கை வெறும் 380 ஆகும். நாட்டில், 72% பேர் இரண்டு கட்ட தவணை செலுத்திக் கொண்டால் இறப்பு எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது" என்று தெரிவித்தார்.
மேலும், மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, கேரளா, டெல்லி, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாநிலங்களில் அதன் வருடாந்திர பாதிப்பு விகிதம் (ஜனவரி 13 - 20) அதிகரித்துள்ளது
கொரோனா பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ளதால், அங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க நிபுணர் குழுக்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது என்றும் தெரிவித்தார்.
கொரோனா தொற்று அறிகுறிகள் குறித்து பேசிய அவர், " இந்தியா மூன்றாவது அலையை சந்தித்து வருகிறது. டெல்லியில் கொரோனா நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 99% பேரிடம் காய்ச்சல், இருமல், உடல் சோர்வு, தொண்டை எரிச்சல், குளிர் நடுக்கம் (மிதமான அல்லது தீவிரமான) ஆகியவை பொதுவாக காணப்பட்டது. தசை பலவீனம், உடல் சோர்வு காணப்படுகிறது. ஐந்தாவது நாளில், தொற்று அறிகுறிகள் விலகுகிறது. இந்த போக்கு நாடு முழுவதும் இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம்.
11 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளாய், காய்ச்சல் மற்றும் நுரையீரல் பிரச்சனையை (Upper Respiratory tract )அனுபவிக்கின்றனர். ஆனால் இது மருத்துவ ரீதியாக முக்கியமான பிரச்னை அல்ல. வெகு குறைவானவர்களுக்கு மட்டுமே நுரையீரல் பாதிப்பு ( நிமோனியா) ஏற்படுகிறது" என்று தெரிவித்தார்.