உலகில் காதலுக்கு மட்டும் அசாத்தியமான விஷயங்களை, கிறுக்குத்தனமான விஷயங்களை செய்ய வைக்கும் ஆற்றல் உண்டு. ஏற்கனவே காதலுக்கு கண் இல்லை என்ற பழமொழி உண்டு. ஆனால், சமீபகாலமாக காதலுக்கு இடம், பொருள் என்று எதுவுமே இல்லை என்பது போல பல காதலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.


காதலர்கள் மத்தியில் கொஞ்சல், சிணுங்கல் இருப்பது என்பது சகஜமான விஷயமே. ஆனால், பொதுவெளியில் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டியது காதலர்களுக்கு மட்டுமின்றி திருமணமான கணவன், மனைவிக்குமே பொருந்தும். ஆனால், சமீபகாலமாக இளம் காதலர்கள் படங்களில் வருவது போல வித்தியாசமான சாகங்களில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளனர்.


ஓடும் ஸ்கூட்டியில் ரொமான்ஸ்:


உத்தரபிரதேசத்தின் பரபரப்பான நகரம் லக்னோ. இந்த லக்னோவின் பரபரப்பான சாலையில் காதலர்கள் இருவர் ஓடும் பைக்கில் ரொமான்ஸ் செய்து கொண்டே செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பொதுவாக இரு சக்கர வாகனத்தில் ஓட்டுபவர் முன்னால் அமர்ந்து இருக்க, பின்னால் உடன் செல்பவர் அமர்ந்திருப்பார். காதலர்கள் கூட வழக்கமாக அப்படித்தான் செல்வார்கள்.






ஆனால், லக்னோவின் அந்த பரபரப்பான சாலையில் ஸ்கூட்டி ஒன்றில் காதலன் ஓட்டிச்செல்ல காதலியோ அவருக்கு முன்னால் அமர்ந்து சாலையின் பின்புறம் நோக்கி அமர்ந்து காதலனை கட்டிப்பிடித்துக் கொண்டு செல்கிறார். அதுவும் அந்த காதலி வாகனத்தை ஓட்டிச்செல்லும் தனது காதலனை கொஞ்சிக் கொண்டே செல்கிறார். இதைப்பார்த்த சக வாகன ஓட்டிகள் அதிர்ச்சியுடனே வாகனத்தை ஓட்டிச்சென்றனர்.


சட்ட நடவடிக்கை:


காதலர்களின் இந்த ரொமான்ஸ் காட்சியை பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர் வீடியோவாக எடுக்க, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த ஜாரிக் என்ற பத்திரிகையாளர் உத்தரபிரதேச போலீசாருக்கும் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தார்.


இந்த வீடியோவை பார்த்த உத்தரபிரதேச போலீசார் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். காதலர்களின் தனிப்பட்ட விஷயங்களில் அடுத்தவர்கள் தலையிடுவது அநாகரீகம் என்றாலும், பொதுவெளியில் காதலர்கள் எல்லைமீறி நடந்து கொள்வது என்பதும் அநாகரீகமான செயல் ஆகும். பொதுவெளியில் கண்ணியத்துடன் நடந்து கொள்வது என்பது அனைவருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Chhattisgarh: போதை மருந்து கலந்த குளிர்பானம்; 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - சிறுவன் உட்பட 3 பேர் கைது..


மேலும் படிக்க: வட இந்தியாவில் நிலவி வரும் கடும் குளிர் அலை எப்போது குறையும்? - இந்திய வானிலை மையம் தகவல்!