காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ யூட்யூப் பக்கம் யூட்யூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொழில்நுட்பக் காரணத்தால் யூட்யூப் பக்கம் நீக்கப்பட்டதா அல்லது எவரேனும் ஹேக் செய்துள்ளனரா என தாங்கள் விசாரணை நடத்தி வருவதாக காங்கிரஸ் தலைமை முன்னதாகத் தெரிவித்துள்ளது.


மேலும், தாங்கள் விரைவில் சேனலை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், கூகுள் யூட்யூப் குழுக்களுடன் தொடர்பில் தாங்கள் இருப்பதாகவும் தங்களது அதிகாரப்பூர்வ பக்கத்தில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


 






2 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை கொண்ட இந்திய தேசிய காங்கிரஸின் சேனல், பெரும்பாலும் அதன் தலைவர்களின் செய்தியாளர் சந்திப்பு வீடியோக்களை வெளியிட்டு வந்தது.


 






மேலும் நாட்டின் சூழல், காங்கிரஸ் கட்சியின் வரலாறு, சுதந்திரப் போராட்ட வரலாறு ஆகியவை குறித்தும், மத்திய அரசின் மீதான தங்கள் குறைகளையும் முன்வைத்து வீடியோக்களைப் பகிர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.