மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக உள்கட்சி தேர்தல் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் முடிவுகள் அக்டோபர் 19-ஆம் தேதி நடைபெறும் எனக் கூறப்படுகிறது.






செப்டம்பர் 22 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும், அக்டோபர் 8 ஆம் தேதிக்குள் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உடல்நலப் பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், இணையம் மூலம் செயற்குழு கூட்டத்திற்குத் தலைமை தாங்கி உள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வெள்ளிக்கிழமையன்று ராஜினாமா செய்ததன் காரணமாக கட்சியில் புதிய குழப்பம் எழுந்துள்ளது. இதற்கு மத்தியில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத் எழுதிய கடிதத்தில், கட்சியின் முழு ஆலோசனை அமைப்பையும் ராகுல் காந்து தகர்த்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.






"செயற்குழு கூட்டத்தின் மெய்நிகர் கூட்டம் 28 ஆகஸ்ட் 2022 அன்று, பிற்பகல் 3:30 மணிக்கு, காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான சரியான தேதி அட்டவணையை அங்கீகரிக்கும். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட்டத்திற்கு கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார்" என காங்கிரஸ் பொதுச் செயலாளர்  கே.சி.வேணுகோபால் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.