ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 3 நாள் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதன் கடைசி நாளான நேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்பம், ஒரு பதவி என்ற புதிய விதிமுறை அமல்படுத்தப்பட உள்ளது. அத்துடன் கட்சி பதவியில் ஒருவர் 5 ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் இருக்க முடியாது என்ற புதிய நடைமுறையும் அமல்படுத்தப்பட உள்ளது. 


இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலருக்கு இந்தப் புதிய நடைமுறை பெரும் சிக்கலாக அமையும் என்று கருதப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த தலைவர் பா.சிதம்பரத்திற்கு இனிமேல் கட்சியில் பதவி கிடைக்கும் வாய்ப்பு குறைவாக கருதப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு விதியில் அவருக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தெரிகிறது. ஏனென்றால் ஒரு குடும்பம், ஒரு பதவி என்ற விதியில் ஒரு விலக்கு உள்ளது. 






அதாவது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் 5 ஆண்டுகளுக்கு மேல் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு இந்த விதியில் விலக்கு உள்ளது. ஆகவே சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஏற்கெனவே எம்பியாக உள்ளார். இதனால் சிதம்பரம் மீண்டும் எம்பியாக பதவியேற்க இந்த புதிய விதி தடையாக இருக்காது என்று கூறப்படுகிறது. அந்த விதியில் உள்ள விலக்கு மூலம் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடலாம். 


மேலும் காங்கிரஸ் கட்சியில் புதியவர்கள் வாய்ப்பு அளிக்கும் வகையில் ஒரு விதி கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி 50 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 50% பதவிகள் ஒதுக்கிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மூத்த தலைவர்களுக்கு இனிமேல் காங்கிரஸ் கட்சியில் பதவி கிடைக்கும் வாய்ப்பு குறைவு என்று கருதப்படுகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண