உக்ரைன் நாட்டில் கடந்த 5 நாட்களாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன்காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. மேலும் பல முக்கிய நகரங்களில் அவ்வப்போது தொடர்ந்து குண்டுகள் விழும் சத்தமும் கேட்டு வருகின்றன. பல இடங்களில் குண்டுகள் போடப்பட்டு சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல் காரணமாக உக்ரைன் நாட்டின் வான்வெளியில் விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் போலாந்து மற்றும் ரூமேனியா உள்ளிட்ட நாடுகள் மூலமாக இந்தியா திருப்பி கொண்டு வரப்பட்டு வருகின்றன.






உக்ரைன் எல்லை வழியாக போலாந்து செல்லும் இந்திய மாணவர்கள் சிலரை உக்ரைன் ராணுவம் தடுத்து நிறுவத்துவதாக புகார் எழுந்தது. அத்துடன் அவர்கள் இந்திய மாணவர்கள் சிலரை தாக்குவதாகவும் கூறி வீடியோ ஒன்று வெளியானது. இந்நிலையில் இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். அத்துடன் இது தொடர்பாக சில கருத்துகளையும் அவர் தெரிவித்துள்ளார். 






அதில், “இந்த மாதிரியான வன்முறை சந்தித்து வரும் இந்திய மாணவர்களை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன். இந்த மாதிரியான வீடியோவை  பார்க்கும் நிலை எந்த பெற்றோருக்கும் வர கூடாது. உக்ரைனில் நாட்டில் சிக்கியிருக்கும் மாணவர்கள் மற்றும் இந்தியர்களை மீட்க வைத்திருக்கும் திட்டத்தை மத்திய அரசு தெளிவாக விளக்க வேண்டும். நம்முடைய நாட்டு மக்களை நாம் கைவிட கூடாது” எனப் பதிவிட்டுள்ளார். 





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண