Rahul Gandhi CM stalin Cycle Ride:தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சைக்கிள் ஓட்டும் வீடியோவை பகிர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சென்னையில் நாம் இருவரும் இணைந்து எப்போது சைக்கிள் ஓட்டலாம் என பதிவிட்டுள்ளார்.
காங். தலைவர் ராகுல் காந்தி: முதலமைச்சர் ஸ்டாலின் சைக்கிள் பயணம்:
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், மாலை பொழுதில் சைக்கிள் பயணம் மேற்கொண்டிருந்தார். அதன் வீடியோவானது அவரது எக்ஸ் பக்கத்திலும் பதிவிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை பகிர்ந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சகோதரரே.! சென்னையில் எப்போது நாம் இருவரும் சைக்கிள் ஓட்டலாம் என பதிவிட்டிருக்கிறார்.
இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் , சிலர் ராகுல் - ஸ்டாலின் உறவின் சகோதரத்துவம் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசியல்வாதிகளில் ஸ்டாலினைத் தவிர யாரையும் சகோதரர் என ராகுல் அழைத்தது இல்லை என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலினும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மிகவும் நெருக்கமான நட்புடன் இருப்பதை பார்க்கும் போது, அவர்களின் நட்புறவு அரசியலை தாண்டியதாகவே பார்க்கப்படுகிறது.
பாசமழை பொழிந்த ஸ்டாலின்:
உங்களுக்கு எப்போது ஓய்வோ உள்ளதோ , அப்போது ஒன்றாக சேர்ந்து சவாரி செய்து சென்னையை ரசிப்போம்.
ஏற்கனவே என் பக்கத்திலிருந்து ஒரு இனிப்புப் பெட்டி, இன்னும் நிலுவையில் உள்ளது. நம் சைக்கிள் பயணத்திற்உ பிறகு, என் வீட்டில் இனிப்புகளுடன் ஒரு சுவையான தென்னிந்திய மதிய உணவை ரசிப்போம் எனவும் தெரிவுத்துள்ளார்
அமெரிக்காவில் முதலமைச்சர் ஸ்டாலின்:
முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கூகுள் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்குச் சென்று, நிறுவன தலைவர்களை சந்தித்து உரையாடினார். மேலும் பல நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சான் பிரான்சிஸ்கோவில் அமெரிக்க வாழ் தமிழர்களையும் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது இந்தியா அமெரிக்கா நட்புறவு குறித்தும் பேசுகையில், அமெரிக்க நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பலர் உயர் பதவிகளில் இருக்கின்றார்கள். விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் இடம் பிடித்திருக்கிறார்கள். இருதரப்பு வர்த்தகமும் மூன்று மடங்கு உயர்ந்து விட்டது. இவையெல்லாம் இரண்டு நாடுகளுக்குமான நட்பின் அடையாளங்கள்
ஒட்டுமொத்த உலகின் நலனுக்கு இந்தியா அமெரிக்கா உறவு மிக மிக முக்கியமாக இருக்கிறது. அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியினர் மிகச் சிறப்பாக வாழ்ந்து வருகிறீர்கள் என்பதை உங்கள் மகிழ்ச்சியான முகங்களைப் பார்க்கும் போதே எனக்கு தெளிவாக தெரிகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.