காங்கிரஸ் கட்சியின் 137 வது நிறுவன தினத்தை முன்னிட்டு டில்லியில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கொடியை ஏற்ற முயற்சித்தார். ஆனால் அசம்பாவிதமாக கொடி அறுந்து, அவரது கைகளிலேயே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 


இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி உதயமாகி 136-வது ஆண்டை நிறைவு செய்து, 28-ந்தேதியான இன்று 137-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. இந்நிலையில் காங்கிரசின் 137 வது நிறுவன தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் கட்சி அலுவலகங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.


 






அதன்படி டில்லியிலும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு அக்கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தி கொடி ஏற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொடி கட்டத்தெரியாவதவர் கொடியை கட்டிவிட்டார் போலும். கொடியை ஏற்றுவதற்காக சோனியாகாந்தி கொடி கம்பத்தின் அருகே வந்தார். அப்போது கொடிக்கயிறை அருகே இருந்த நபர் அவிழ்த்து கொடுக்க, சோனியா அதை வாங்கினார். அப்போது கொடியை இழுக்க முடியாமல் சோனியா காந்தி சற்று தடுமாறினார். இதனால் அருகில் இருந்த நபர் அதை வாங்கி இழுக்க, கொடி நேராக சோனியா காந்தி கைக்கே வந்துவிட்டது. 


இதனால் சோனியா காந்தி உள்பட அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து மீண்டும் கொடியை சரிசெய்து மேலே ஏற்ற முயற்சித்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. 


இதைத்தொடர்ந்து கட்சிக்கொடியை மடித்து எடுத்துச் சென்றனர். இதுகுறித்த வீடியோ பரவலாக பரவி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Rajamouli| ‛ராம் சரண் அப்படி... ஜூனியர் என்.டி.ஆர் இப்படி...’ ராஜமௌலி ஓபன் டாக்!