உலகப் புகழ்பெற்ற ஜான் எப் கென்னடி சென்டர் ஃபார் தி பெர்பாமிங் ஆர்ட்ஸ்  மையத்தில் இந்திய திரைப்பட திரைப்பட நடிகர் வீர்தாஸ் (Vir Das) 'டூ இந்தியன்ஸ்' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். இந்தியர்களின் அடிப்படை முரண்பாடுகளை எடுத்துரைக்கும் விதமாக அமைந்த இந்த சொற்பொழிவு மிகவும் அழுத்தமானதாகவும், கேட்கும் நால்வரின்  சிந்தனையை தூண்டும் விதமாகவும் இருந்தது. அதேசமயம், இவரின் சொற்பொழிவுக்கு எதிரான வலுவான எதிர்ப்புக் குரலும் ஆங்காங்கே எழத் தொடங்கியுள்ளன. 


    



டூ இந்தியன்ஸ் பேச்சில் உள்ள முக்கிய சாரம்சங்கள்:


ஒவ்வொரு முறையும் பச்சை (செர்சி - பாகிஸ்தான்) அணியுடன் விளையாடும் போது, நீலம் வெற்றியடையும் என்று ஏக்கம் கொள்கிறோம். ஆனால், பச்சையிடம் தோற்கும் ஒவ்வொரு முறையும் காவியாக மாறும் இந்தியாவில் இருந்து வருகிறேன். பகல் நேரங்களில் பெண்களை வழிபட்டுவிட்டு, இரவில் கூட்டு பாலியல் வன்புணர்ச்சி செய்யும் இந்தியாவில் இருந்து வருகிறேன்;   


பிரதமர் நலன் குறித்த தகவல் எப்போது வந்தாலும் கவலைப்படும் எங்களுக்கு பிரதமர் நலன் நிதி (PM Cares Fund) தகவல் கிடைக்கப்பெறாத இந்தியாவில் இருந்து வருகிறேன்; 30 வயதுக்கும் குறைவான அதிகமான இளைஞர்கள் உள்ள நாட்டில், 75 வயது மதிப்புமிக்க தலைவரின் 150 வருட பழமையான சிந்தனைகளை பேசி வரும் இந்தியாவில் இருந்து நான் வருகிறேன்;


ஆங்கிலேயே ஆட்சியை அப்புறப்படுத்திய பிறகும், அரசாங்கத்தை ஆளும் கட்சி என்று கூறும் இந்தியாவின் இருந்து நான் வருகிறேன்;  


 ஒரு தேசத்தின் அடிப்படையான கருத்தாக்கம் முரண்பாடாக உள்ளது என்பதையே வீர் தாஸ் தனது பேச்சில் தெரிவித்துள்ளார். முரண்பாடு நமது வாழ்வின், சமுதாயத்தின், தேசத்தின், அடிப்படையான உண்மையாக விளங்குகிறது.






கங்கனா ரனாவத் போன்ற சிலர், இந்த சொற்பொழிவை தேசத்தை அவமதிக்கும் செயலாக கூச்சலிடுகின்றனர்.









ஆனால், முரண்பாடுகள் என்றுமே தேசியவாதிகளின் எதிர்பார்ப்புகளுக்கு அடங்காத விஷயங்களைக் கொண்டுள்ளது என்று என்னும் சிலர், வீர் தாஸுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.