குழுவாக செயல்படுதல் என்பது குழந்தை பருவத்தில் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயமாகும். இதன் மூலம், குழந்தைகள் ஒற்றுமையாக இணைந்து செயல்படுவது மற்றும் குழு உணர்வைப் பேணுவது எப்படி என்பதை கற்றுக்கொள்கிறார்கள். இது அவர்கள் பிற்காலத்தில் வேலை செய்யும் இடங்களில் உதவி செய்கிறது. குழுவாக செயல்பட்டு ஒரு வேலையை செய்யும்போது என்ன விதமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம் அதனை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை பயிற்றுவிப்பது குழந்தைகள் மேம்பாட்டுக்கு உதவுகிறது.

Continues below advertisement

வைரல் வீடியோ

Continues below advertisement

இதைப் பற்றி ஏன் திடீரென்று பேசுகிறோம் என்று நினைத்தால் நீங்க்ள் அந்த வைரல் வீடியோவை பார்க்கவில்லை என்று அர்த்தம். ஆன்லைனில் வெறித்தனமாக வைரலாகி வரும் ஒரு வீடியோவில், 2 ஆம் வகுப்பு மாணவர்கள் குழு ஒன்று சேர்ந்து பேல்பூரி தயாரிக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் RJF Nagriksatta என்ற பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதுவரை இந்த விடியோ 10.4 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்: Love Horoscope Today : வெறித்தனமா ஒன் சைடு லவ்வுல மூழ்கி இருக்கீங்களா நண்பா! அப்படினா, ஜாலியா படிங்க லவ் ராசிபலன்கள்!

பேல்பூரி செய்யும் மாணவர்கள்

இந்த வைரல் வீடியோவில், மாணவர்கள் ஒரு பெரிய கொள்கலனில் பேல்பூரி செய்ய தேவையான பொருட்களை ஒவ்வொன்றாக கொட்டுவதை காணலாம். ஒரு மாணவர் பொறியை கொள்கலனில் சேர்த்தபோது, ​​மற்றவர்கள் தக்காளி, வெங்காயம், வறுத்த கடலை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை வரிசையில் வந்து சேர்த்தனர். குழந்தைகளில் ஒருவர் எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்தார்.

ஸ்டைலாக உப்பு போடும் மாணவர்

இறுதியில், ஒரு சிறுவன் பேல்பூரியில் சிறிது உப்பு சேர்த்தது தான் அனைவரையும் கவர்ந்தது. ஸ்டைலாக கைகளை வைத்துக்கொண்டு உப்பை சேர்த்துவிட்டு திஸ் ஐஸ் சால்ட் என்ஸ்று கூறியது பலரையும் ஈர்த்துள்ளது. இந்த பதிவின் மேல் உள்ள தலைப்பின்படி, மாணவர்கள் மும்பையில் உள்ள லால்ஜி திரிகாம்ஜி எம்பிஎஸ் ஆங்கில மீடியம் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. நெட்டிசன்கள் இந்த வீடியோவை மிகவும் ரசிக்கின்றனர். மேலும் கடைசியாக வந்து உப்பு போடும் சிறுவனின் ஸ்டைலை பலர் ரசித்து கமெண்ட் செய்துள்ளனர். பொதுவாக இது போன்ற கூட்டு செயல்பாடுகளில் ஒருவர் செய்வதற்கேற்ப நாமும் செய்ய வேண்டும். மற்றவர்களை விட தனித்து தெரிய வேண்டும் அதிகமாக செய்தாலோ, ஏதோ காரணங்களால் குறைவாக செய்தாலோ அது நாம் செய்யும் வேலையை கெடுத்துவிடும். பேல்பூரியில் அனைத்து விஷயங்களும் சரியான அளவில் கலக்கப்பட்ட வேண்டும். அதில் ஏதாவது கூடியோ குறைந்தோ போகாமல் இருக்க குழுவினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்த வாழ்க்கையின் தேவையை மறைமுகமாக கற்றுத்தருவதுதான் இது போன்ற ஆக்டிவிடீஸ். இது வளர்ந்த பிறகு அவர்களுக்கு மிகவும் பயனுள்ள படிப்பினைகளை தரும் என்று கூறுகிறார்கள்.