தொலைக்காட்சிகளில் காரசாரமான விவாதங்கள், வார்த்தை மோதல்கள் இப்போதெல்லாம் அதிகம் பார்க்க முடிகிறது. ஆனால், இப்போது வார்த்தை மோதல் அதன் எல்லையை மீறி, தவறான வார்த்தைகளை பிரயோகிப்பது, அவமானப்படுத்துவது, கீழ்த்தரமாக விமர்சிப்பது, தரங்குறைந்த வகையில் பேசுவது என டிவி விவாதங்கள் சென்றுக்கொண்டிருக்கிறது கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்த வார்த்தை மோதல் அடிதடி சண்டையாக ஒரு நிகழ்ச்சியில் மாறிப்போயிருக்கிறது.
பாஜக – காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களுக்கு இடையே மோதல்
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற ஒரு விவாத நிகழ்ச்சியில் பீகார் வெற்றிக்கு வாக்கு திருட்டே காரணம் என காங்கிரஸ் நிர்வாகி பேச, அதற்கு பாஜக தரப்பில் பேசிய நபர் நீதி மட்டுமே அங்கு வென்றிருப்பதாக வெற்றி மமதையோடு குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, வாக்குத் திருட்டால் பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் அதளபாதாளத்தை நோக்கி சென்றுவிட்டதாக கூறி காங்கிரஸ் நிர்வாகிகளே கடும் கோபத்தில் இருந்த நிலையில், நீதி வென்றது என பாஜககாரர் பேசியது, அந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளரை கோபம் ஆக்கியுள்ளது. இதனால் ஆவேசப்பட்ட அவர் பாஜககாரர் பேசியதை பார்த்து மேசையை ஓங்கி வேகமாக குத்தியுள்ளர். இதனை பார்த்த பாஜககாரர் உடனே காங்கிரஸ் காரரின் சட்டையை பிடித்து தள்ளியிருக்கிறார். சுதாரித்துக்கொண்ட காங்கிரஸ் நபர், பாஜக நபரை மீண்டும் தள்ளிவிட்டு காதில் பளார் என்று அறைவிட்டு, அடி பொளந்திருக்கிறார்.
வைரல் ஆன வீடியோ
இதனை கண்ட பெண் நெறியாளர் அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்க, மற்ற விருந்தினர்கள் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்துள்ளனர். இந்த வீடியோ தெலுங்கானா மாநிலத்தில் வைரலாக சென்றுகொண்டிருக்கிறது.