உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் (Uday Umesh Lalit) நியமிக்க என்.வி. ரமணா பரிந்துரை செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பவர் என்.வி.ரமணா (N. V. Ramana). மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் கேட்டுகொண்டதன் பெயரில், 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித்-ஐ நியமிக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளார்.
தற்போதைய தலைமை நீதிபதியாக இருக்கும் என்.வி. ரமணாவின் பதவி காலம் இந்த மாதத்தோடு நிறைவடைகிறது.
உதய் உமேஷ் லலித் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கிறார். முன்னதாக, உச்ச நீதிமன்றத்தின் senior counsel-லில் பொறுப்பு வகித்தார். உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி நேரடியாக தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்படும் ஆறாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்