அருணாச்சல பிரதேசத்தின் மேல் சியாங் மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லைக்குள் இருந்து 17 வயது சிறுவனை சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் (பிஎல்ஏ) கடத்திச் சென்றதாக அம்மாநில எம்பி தபீர் காவ் புதன்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


கடந்த செவ்வாய்க்கிழமை 17 வயதான மிராம் டாரோன் என்ற சிறுவனும், 27 வயதான ஜாணி யாயிங் என்ற இளைஞரும் சீன எல்லை பகுதியான துதிங் பகுதியில் வேட்டையாட சென்றுள்ளனர். அப்பொழுது, திடீரென வந்த சீன ராணுவம் அதே பகுதியில் இருவரையும் சிறைபிடிக்க முயற்சி செய்துள்ளது. 




இராணுவத்திடம் இருந்து தப்பிய டாரோனின் நண்பர் ஜானி யாய்யிங், பிஎல்ஏ மூலம் மிராம் டாரோன் கடத்தப்பட்டதைப் பற்றி அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் அம்மாநில எம்பி தபீர் காவ்விடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. 


இதைத்தொடர்ந்து சீன ராணுவத்திடம் இருந்து சிறுவனை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு எம்பி தபீர் காவ் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். அவர் வெளியிட்ட அந்த பதிவில், அருணாச்சல பிரதேசத்தில் சாங்போ நதி இந்தியாவுக்குள் நுழையும் இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.






 


"சீனா #பிஎல்ஏ 17 வருட ஜிடோ வில்லின் ஷ மிராம் டாரோனை கடத்திச் சென்றுள்ளது. நேற்று 18 ஜனவரி 2022 அன்று இந்திய எல்லையான லுங்டா ஜோர் பகுதியிலிருந்து (சீனா 2018 இல் இந்தியாவிற்குள் 3-4 கிமீ சாலையை அமைத்தது) சியுங்லா பகுதிக்கு (பிஷிங் கிராமம்) கீழ் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 


மேலும், இச்சம்பவம் குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் நிசித் பிரமானிக்கிடம் தெரிவித்துள்ளதாகவும், இது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் எம்.பி. தபீர் காவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண