கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில் அவர் பேசும்போது, கூட்டாட்சி மற்றும் மத்திய - மாநில உறவு என்ற தலைப்பில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மலையாளத்திலும் சரளமாகப் பேசி கவனம் ஈர்த்தார். மேலும் ஒத்தக் கொள்கையைக் கொண்ட கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்தக் கூட்டத்திதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,


நாம் வெவ்வேறு இயக்கங்களாக இருந்தாலும் எங்கள் கட்சிக் கொடியில் பாதி சிவப்பு நிறம் இருக்கிறது. நாம் ஒரே கொள்கைக் காரர்கள் என்பதால் தான் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்திய அளவிலும் கூட்டணியை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.


பினராயி விஜயன் கேரளத்தில் முதலமைச்சராக இருக்கிறார். அதனால் நமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என நாம் நினைக்கக் கூடாது.


 






கூட்டாட்சி, மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, சமத்துவம், பொதுநலன், சமூக நீதி ஆகிய கொள்கைகளை இந்தியா முழுவதும் நிலைநிறுத்த குரல் எழுப்ப வேண்டும். சித்தாந்தத்தை ஆதரிக்கும் அனைத்து சக்திகளும் ஒன்று சேர வேண்டும். அங்கும் இங்கும் தனித்தனி குரல்கள் அதிகம் இல்லை. அது ஒன்றுபட்ட குரலாக இருக்க வேண்டும். சில மாநிலங்களில் மட்டும் ஒன்றாக இருந்தால் போதாது.


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அரசியலமைப்பு சட்டத்தின் 356ஆவது சட்டப்பிரிவை பயன்படுத்தி கலைக்கலாம் என்ற ஜனநாயக விரோத செயல் நட்த்தப்பட்ட முதம் மாநிலம் கேரளா. அப்படிப்பட்ட இந்த மாநிலத்தில் தற்போது மாநில சுயாட்சி, கூட்டாட்சியை வலியுறுத்தி இந்த மாநாடு நடக்கிறது. ஜனநாயத்துக்கு புறம்பான அந்தச் செயலுக்கு பலியான முதல் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. எனவே உங்களைவிட இந்த மாநாட்டை நடத்துவதற்கு தகுதியான நபர்கள் யாரும் இல்லை.


 






அதே 356ஆவது பிரிவால் இரண்டு முறை தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்த இயக்கம் திராவிட இயக்கம், என்னை பேசுவதற்காக நீங்கள் அழைத்திருக்கிறீர்கள். இது பேசுவதற்கான நேரம் மட்டும் இல்லை. இது செயல்படுத்துவதற்கான நேரம்" எனத் தெரிவித்துள்ளார்.