சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ளது பிலாஸ்பூர். இங்குள்ள பிலாஸ்பூர் - கட்னி இடையேயான ரயில் பாதை மிகவும் பரபரப்பான ரயில் பாதை ஆகும்.
பயணிகள் ரயில் - சரக்கு ரயில் மோதல்:
இந்த ரயில் பாதையில் இன்று பயணிகள் மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது, இந்த ரயில் வந்த அதே பாதையில் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது, மின்சார ரயில் முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பலத்த வேகத்துடன் மோதியது.
6 பேர் மரணம்:
இதில் மின்சார ரயில் சரக்கு ரயிலின் பெட்டிகள் மீது ஏறி நின்றது. இந்த இரண்டு ரயில்களும் மோதிய கோர விபத்தில் பயணிகள் நிலைகுலைந்தனர். இந்த கோர விபத்துச் சம்பவத்தில் தற்போது வரை 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜெய்ராம்நகர் ரயில் நிலையம் அருகே இந்த விபத்து அரங்கேறியுள்ளது. இந்த விபத்தில் மின்சார ரயிலின் முதல் பெட்டி அப்படியே மோதிய வேகத்தில் சரக்கு ரயிலின் மீது ஏறி நிற்கிறது. இந்த விபத்து வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விபத்து எப்படி நடந்தது? இந்த விபத்திற்கான காரணம் என்ன? யாருடைய அலட்சியம்? சிக்னல் கோளாறா? என்ற பல கட்டத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இந்த கோர விபத்தால் மிகுந்த அதிர்ச்சிக்கும், சோகத்திற்கும் ஆளாகியுள்ளனர்.
20 பேர் மருத்துவமனையில் அனுமதி:
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், ரயில்வே போலீசார், தீயணைப்பு படையினர் உள்ளிட்ட பலரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கவும் அரசு மருத்துவக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய தகவலின்படி, 20 பேர் வரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தால் பல ரயில்களும் பாதி வழியிலே நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே ரயில் விபத்துகள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. திருவள்ளூரில் கச்சா எண்ணெய் கொண்டு வந்த ரயில் தீ விபத்தில் சிக்கியது என்று பல மோசமான சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கவும் அரசு மருத்துவக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.
அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே துறை அமைச்சராக பதவி வகித்து வரும் இந்த காலகட்டத்தில் அதிகளவில் ரயில் விபத்துகள் அரங்கேறி வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. அதற்கு கடந்த கால ரயில் விபத்துகளே சான்றாகும். இந்த நிலையில், இந்த சம்பவம் மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு மேலும் ஒரு பின்னடைவாகவே மாறியுள்ளது.