பண மோசடி வழக்கில் சத்தீஸ்கர் மாநிலத்தின் முக்கிய ஐஏஎஸ் அதிகாரி அமலாக்கத்துறை இயக்குநரக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 


சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேலின் துணைச் செயலாளர் சௌமியா சௌராசியா, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 4 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட பிறகு, உடல்நலப் பரிசோதனைக்காக சௌராசியா அழைத்துச் செல்லப்பட்டார். மத்திய ரிசர்வ் போலீஸ் படை உதவியுடன் அவர் உள்ளூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


இந்த வழக்கில் சோதனை நடத்திய பிறகு, அக்டோபர் மாதம் ஐஏஎஸ் அதிகாரி சமீர் விஷ்னோய் மற்றும் இருவரை அமலாக்கத்துறை கைது செய்தது.


வருமான வரித்துறையின் புகாரை அமலாக்கத்துறை கவனத்தில் எடுத்ததைத் தொடர்ந்து பணமோசடி விசாரணை தொடங்கப்பட்டது.


சத்தீஸ்கரில் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு டன் நிலக்கரியிலிருந்தும் டன் ஒன்றுக்கு ₹ 25 சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்டது. இதில், மூத்த அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் இடைத்தரகர்கள் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.


 






பிப்ரவரி 2020 இல் சௌராசியாவின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில், மத்திய அமைப்பின் சோதனையை அரசியல் பழிவாங்கல் என்றும், தனது அரசாங்கத்தை நிலையற்றதாக மாற்றும் முயற்சி இருப்பதாகவும் முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.


இதுகுறித்து பூபேஷ் பாகேலி தனது ட்விட்டர் பக்கத்தில், "உள்ளூர் போலீஸாருக்குத் தெரிவிக்காமல் மக்களைக் காவலில் வைப்பது, சம்பவ இடத்திலேயே சம்மன் அனுப்புவது, முட்டி போட வைத்து, இரவு வரை உணவு, தண்ணீர் வழங்காமல் வைத்து, கம்பியால் அடித்து, சிறையில் அடைக்கப் போவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மிரட்டினர்.


அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையின் போது வீடியோ பதிவு செய்ய வேண்டும். ஊழலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை மற்றும் வருமான வரி போன்ற ஏஜென்சிகள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 






அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரி துறையின் விசாரணையின் போது சட்டவிரோத நடவடிக்கைகள் வெளிவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என பதிவிட்டுள்ளார்.