Chhattisgarh Accident: சத்தீஸ்கரில் நடந்த சாலை விபத்தில் 9 பேர் பலியான நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 


சத்தீஸ்கர் விபத்து - 9 பேர் பலி:


ஞாயிற்றுக்கிழமை இரவு பெமேதரா மாவட்டத்தில் உள்ள கதியா கிராமத்திற்கு அருகே,  சாலையோரம் லோட் ஏற்றப்பட்ட டிரக் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது, குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த, பயணிகள் இருந்த சரக்கு வாகனம் ஒன்று டிரக்கின் மீது மோதியுள்ளது. இதில் சரக்கு வாகனத்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.










 


விபத்து தொடர்பாக விசாரணை:


3 சிறுவர்கள் உட்பட பலியான 9 பேரை அடையாளம் காணும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. விபத்து தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், ஓட்டுனர் மதுபோதையில் இருந்தாரா? அல்லது தூக்க கலக்கத்தில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததா என, விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடயே, காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு பாஜக எம்பி திபேஷ் சாஹு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். 


உயிரிழந்தவர்கள் பதர்ரா கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் எனவும், திரைய்யா கிராமத்தில் ஒரு குடும்ப விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது தெரிய வந்தது.மேலும், பலியானவர்கள் பூரி நிஷாத் (50), நீரா சாஹு (55), கீதா சாஹு (60), அக்னியா சாஹு (60), குஷ்பு சாஹு (39), மது சாஹு (5), ரிகேஷ் நிஷாத் (6) மற்றும் ட்விங்கிள் நிஷாத் ( 6) எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.