சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர்-தன்டேவாடா எல்லையில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 


இடதுசாரி தீவிரவாதம் நாட்டுக்கு பெரும் சவால் விடுத்து வருவதாக மத்திய அரசு கூறி வருகிறது. குறிப்பாக, மாவோயிஸ்டுகளால் வளர்ச்சி பணிகள் தடைப்படுவதாக மத்திய அரசு கூறி வருகிறது. மாவோயிஸ்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்டவை உள்ளன. இந்த மாநிலங்களில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தொடர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


சத்தீஸ்கரில் பரபரப்பு சம்பவம்:


இந்த நிலையில், சத்தீஸ்கரில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மாவட்ட ரிசர்வ் காவல் படையும் (டிஆர்ஜி) மற்றும் சிறப்பு அதிரடிப்படையும் (எஸ்டிஎஃப்) மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை நேற்று தொடங்கியது.


 






இன்று மதியம் 12:30 மணிக்கு மாவோயிஸ்டுகள் இருக்கும் இடத்தை பாதுகாப்பு படை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். தற்போது, என்கவுண்டர் நடந்து வருகிறது. மாவோயிஸ்டுகளிடம் இருந்த ஏகே சீரிஸ் மற்றும் பிற ஆயுதங்கள் உட்பட பல துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


நக்சல் பாதித்த மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் 2010ஆம் ஆண்டை விட 2022இல் 77 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் இடது தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டு பகுதிகளில், பாதுகாப்பு நிலைமையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இடது தீவிரவாத்தை எதிர்கொள்ள கடந்த 2015ஆம் ஆண்டு, தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.


இடது தீவிரவாத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள், அப்பாவி மக்கள் கொல்லப்படுவது 2010ஆம் ஆண்டை காட்டிலும் 2022ஆம் ஆண்டு 90 சதவிகிதம் குறைந்துள்ளது.


இதையும் படிக்க: ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?