நாட்டில் உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 70 சதவிகிதத்தை இந்திய அரசு உற்பத்தி செய்யும். பெறப்பட்ட தடுப்பூசிகள் தொடர்ந்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், இந்த தடுப்பூசிகள் மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும். அரசாங்க தடுப்பூசி மையங்கள் மூலம் அனைத்து குடிமக்களுக்கும் முன்னுரிமையின் அடிப்படையில் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும். இந்த திட்டம் ஜூன் 21 முதல் செயல்படுத்தப்படும் மற்றும் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களுக்கு இந்திய அரசு இலவசமாக வழங்கும் தடுப்பூசி அளவைப் பொறுத்து பின்வரும் வரிசையின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்.
1. சுகாதார பணியாளர்கள்
2. முன்களப்பணியாளர்கள்
3. 45 வயதிற்கு மேற்பட்ட குடிமக்கள்
4. இரண்டாவது டோஸ் பெறவிருக்கும் குடிமக்கள்
5. 18 வயதிற்கு மேற்பட்ட குடிமக்கள்
மாநிலங்களில் உள்ள மக்கள் தொகை, நோயின் அளவு, ஆகியவற்றை கருத்தில் கொண்டு தடுப்பூசிகள் வழங்கப்படும். மேலும் தடுப்பூசிகளை மாநில அரசுகள் வீணாக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கான தடுப்பூசி அளவுகளின் விலை தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும் என்றும். தனியார் மருத்துவமனைகள் தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெற்ற தடுப்பூசியை மக்களுக்கு அதிகபட்சமாக 150 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தொகைக்கு தான் தடுப்பூசிகள் போடப்படுகிறதா என்பதை மாநில அரசுகள் கவனிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வருமான அடிப்படையில் இல்லாமல் அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்றும், விருப்பமுள்ள மக்கள் பணம் செலுத்தி தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி உற்பத்தியாளர்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும். புதிய தடுப்பூசிகளை கண்டறிய ஊக்குவிப்பதற்கும். உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்கள், நேரடியாக தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி வழங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தடுப்பூசி குறித்து இன்னும் பல தகவல்களை மத்திய அரசு வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.