ஆதார் வாங்கி 10 வருடங்கள் ஆகிவிட்டால் அதில் தற்போதைய வசிப்பிட மற்றும் இதர தகவல்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று மக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடு தழுவிய அளவில் ஆதார் கார்டை அனைவருக்கும் கொண்டு வந்துவிட வேண்டும் என்று மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்னர் கூட பான் கார்டுடன் ஆதார் எண்ணைய் மத்திய அரசு இணைக்கச் சொல்லி நாம் அனைவரும் இணைத்து இருக்கிறோம்.  அதுபோலவே தற்போது பாஸ்போர்ட் எடுக்கும் நடைமுறையிலும் நமது பாஸ்போர்ட்டுடன் ஆதார் கார்டு இணைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு தனிநபரும் ஆதார் கார்டை வங்கிக்கு  சமர்ப்பித்து வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து இருக்கிறார்கள். தற்சமயம் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கும் அடையாள அட்டையையும் ஆதார் எண்ணையும் இணைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

Continues below advertisement

இன்னும் சற்று ஏற குறைய 10 வருடங்களுக்குள்ளாக இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஆதார் அடையாள அட்டை கண்டிப்பாக கிடைத்துவிடும். இதற்குப் பிறகு வரும் தலைமுறையினருக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல பயன்படுத்தும் அடையாள அட்டையான பாஸ்போர்ட் மற்றும் அவர்கள் பையில் ஒரே ஒரு ஆதார் கார்டு அட்டை என இரண்டு மட்டுமே இருக்கும். தற்போது நடைமுறையில் இருக்கும் டிரைவிங் லைசன்ஸ்,ஓட்டர் ஐடி,வங்கிக் கணக்கு எண் மற்றும் வருமான வரித்துறை அளித்திருக்கும் பான் கார்டு என எந்த அடையாள அட்டைகளும் தேவைப்படாமல் ஆதார் ஒன்று மட்டுமே அனைத்துக்கும் மாற்றாக விளங்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் தான் ஆதார் வாங்கி 10 வருடங்கள் ஆகிவிட்டால் அதில் தற்போதைய வசிப்பிட மற்றும் இதர தகவல்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று மக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, யுஐடிஏஐ சார்பில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்றவர்கள், உடனடியாக தங்களது வீட்டு முகவரி, பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து, மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்து புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள  அரசாணையில், https://myaadhaar.uidai.gov.in/ இணையதளம் அல்லது அருகில் உள்ள ஆதார் மையங்களுக்குச் சென்று, தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஆதார் ஏன் அவசியம்:

அரசு பல்வேறு மானியங்கள், நிதியுதவிகளை மக்களுக்கு வழங்குகிறது. ஆதார் எண் பயன்படுத்தியே வங்கிகளில் நேரடியாக மானியம் வரவு வைக்கப்படுகிறது. சிலிண்டர் மானியம் தொடங்கி முதியோர் பென்ஷன் வரை பலவற்றிற்கும் இது பயன்படுகிறது. எனவே இந்த அட்டையை வைத்திருப்பது அவசியம் என மத்திய அரசு வலியுறுத்துகின்றது. ஆதார் அப்டேஷன் கட்டாயம் என்று சொல்லப்படவில்லை என்றாலும் ஆதாரை மத்திய அரசு பல்வேறு திட்டங்களுடனும் இணைக்கும் சூழலில் அதனை அப்டேட் செய்வதும் நலமே.