Prime Minister Modi: பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்; முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர் பார்க்கபப்டுகிறது. 


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று டெல்லியில்  நடைபெற்றது.  டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார். இந்த அமைச்சரவை கூட்டத்தில், நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் சில முக்கியத் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு ரூபாய் 22 ஆயிரம் கோடி நிவாரணம் அளிக்க இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிப்பது குறித்தும் தீவிரமாக விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.