இந்தியா முழுவதும் ஆடிட்டர் படிப்புகளுக்காக நடத்தப்படும் சிஏ ஃபவுண்டேஷன் தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதை எப்படி சரிபார்ப்பது என்று பார்க்கலாம். 


இந்தியாவில் ஆடிட்டர் எனப்படும் பட்டய கணக்காளராக விரும்புவோர் ஐசிஏஐ நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது  கட்டாயம் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசு பட்டயக் கணக்காளருக்கான சான்றிதழ் வழங்கும்.


இந்தத் தகுதித் தேர்வு முதல்நிலைத் தேர்வு (Foundation Examination), இடைநிலைத் தேர்வு (Intermediate Examination),  இறுதித் தேர்வு (Final Examination) என்று மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. பட்டப் படிப்பை முடித்தவர்கள், இடைநிலை மற்றும் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. 




இந்த நிலையில், 2022-ம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதம் நடைபெற்றது. குறிப்பாக முதல் தாளுக்கான (Principles and Practice of Accounting) தேர்வு ஜூன் 24ஆம் தேதியும், இரண்டாவது தாள் (Business Laws and Business Correspondence, and Reporting) ஜூன் 26ஆம் தேதியும் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 10ஆம் தேதி) வெளியாகி உள்ளன. 






இதை எப்படி சரிபார்ப்பது? 


* தேர்வர்கள், இந்திய பட்டயக் கணக்காளர் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ icai.nic.in என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யவும்.


* முகப்புப் பக்கத்தில் 'CA Foundation result 2022' என்ற இணைய முகவையை க்ளிக் செய்யவும்.


* பதிவு எண் உள்ளிட்ட தேவையான விவரங்களை உள்ளிட்டு, சப்மிட் கொடுக்கவும்.


* அதில் வெளியாகும் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம். 


* சிஏ ஃபவுண்டேஷன் தேர்வு முடிவுகளுக்கான மதிப்பெண் அட்டையைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


ஒவ்வொரு தாளிலும் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டியது கட்டாயம் ஆகும். ஒட்டுமொத்தமாக இரண்டு தாள்களிலும் சேர்த்து, 50 சதவீதத்துக்கும் குறையாமல் மதிப்பெண்களைப் பெற வேண்டியது அவசியம் ஆகும்.


*


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண