Crime : குழந்தைக்காக பிரார்த்தித்த பெண்.. மருந்து தீர்த்தம்.. மிர்ச்சி பாபா செய்த கொடூரம்.. தொடரும் சாமியார் அவலங்கள்..

மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் பெண் பக்தரை பாலியல் வன்கொடுமை செய்ததாக மிர்ச்சி பாபா என்ற வைரக்யானந்த் கிரியை காவல்துறையினர் கைது செய்தனர். 

Continues below advertisement

மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் பெண் பக்தரை பாலியல் வன்கொடுமை செய்ததாக மிர்ச்சி பாபா என்ற வைரக்யானந்த் கிரியை காவல்துறையினர் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட அந்த சாமியார் குவாலியரில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து காலையில் கைது செய்யப்பட்டதாக குவாலியர் காவல்துறை கண்காணிப்பாளர் அமித் சங்கி தெரிவித்தார்.

Continues below advertisement

பெண் பக்தர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 376 (கற்பழிப்பு) பிரிவின் கீழ் கிரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் காவல் ஆணையர் ரிச்சா சவுபே தெரிவித்தார்.

சாமியாரை போபாலில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆகஸ்ட் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த திங்களன்று அளிக்கப்பட்ட புகாரின்படி, குற்றம் சாட்டப்பட்ட மிர்ச்சி பாபா போபாலில் ஜூலை 17 அன்று அந்த பெண் பக்தரை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரில், “ கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாமியார் வைராக்கியானந்த் கிரியிடம் ஒரு பெண் தனக்கு குழந்தை இல்லை என்று கூறி பரிகாரம் கேட்டு வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த நீரை தீர்த்தமாக கொடுத்துள்ளார். இதனால், அந்த பெண் பக்தர் மயக்கமடையவே இதை சாதமாக்கிகொண்ட சாமியார், அத்துமீறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

தொடர்ந்து, இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக அந்த பெண்ணை மிரட்டி அனுப்பியுள்ளார். இருப்பினும் அந்த பெண், தைரியத்துடன் தனக்கு நேர்ந்த கொடுமையை காவல் நிலையத்தில் புகாராக அளித்தார். அதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் மிர்ச்சி பாபா மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாகி இருந்த அவரை கைது செய்தனர். 

மேலும், கூடுதல் டிசிபி சௌபே கூறுகையில், மிர்ச்சி பாபா அந்த பெண்ணின் விவரங்களை எடுத்துக் கொண்டதாகவும், பின்னர் தனக்கு தீர்த்தம் வழங்கி அதை அவர் உட்கொண்டதால் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, மிர்ச்சி பாபா அந்த பெண்ணை வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணிடம் சம்பவத்தை யாரிடமும் வெளிப்படுத்தினால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டினார். இதனால் பயந்து போன அப்பெண் வீடு திரும்பியதும் நடந்த சம்பவத்தை யாரிடமும் தெரிவிக்கவில்லை.

சில நாட்களுக்கு முன், தெரிந்த ஒருவரிடம் விவரங்களைப் பகிர்ந்து கொண்டபோது, ​​அவரது கணவர் காதில் விழுந்து அவரைக் கைவிட்டுவிட்டார். அவள் அண்ணன் வீட்டில் தங்கியிருந்தாள்.

இறுதியாக, அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் செய்ய முடிவு செய்து, கடந்த திங்கள்கிழமை புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில், குற்றவாளி மீது பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு பதிவு செய்த போலீசார், குவாலியரில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து மிர்ச்சி பாபாவை கைது செய்தனர்.

கடந்த மத்தியப் பிரதேச மாநில சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களில், கிரி, காங்கிரஸுக்கு ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங்கின் வெற்றிக்காக இந்த சாமியார் ஒரு யாகத்தை ஏற்பாடு செய்திருந்தார். மேலும் அவரது வெற்றியின் தோல்வி கணிப்பைத் தொடர்ந்து "சமாதி" அடைவதாக அறிவித்தார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

Continues below advertisement
Sponsored Links by Taboola