இதோ அதோ என்று 5 மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, 4 மாநிலங்களிங் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது அல்லது தக்கவைத்தது. பஞ்சாப்பில் பாஜக பெரிய வெற்றியை பெற முடியவில்லை என்றாலும், அந்த கட்சி அங்கு கோதாவில் இல்லை. மாறாக காங்கிரஸ்-ஆம் ஆத்மி இடையே இருந்த போட்டியில், ஆளுங் காங்கிரஸ் தோல்வி அடைந்து, முதன்முறையாக ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் 5 மாநிலங்களிலும் படுதோல்வியை அடைந்தது.
இந்நிலையில், அந்த தோல்வியை ஆராய நேற்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியில் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது. அதில் பதவி விலக சோனியா விருப்பம் தெரிவித்ததாகவும், அதை மற்றவர்கள் எதிர்த்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தான், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது கட்ட கூட்டத்தொடர் இன்று தொடங்குவதாக கூறப்பட்டது.
தேர்தல் தோல்விக்குப் பின் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சந்திக்கும் கூட்டம் என்பதால், அதன் மீதான எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும், அனைத்து கட்சி உறுப்பினர்களும் சட்டமன்றத்திற்கு வந்தடைந்தனர். சபாநாயகர் சபைக்கு வந்த சிறுது நேரத்தில், பிரதமர் மோடி லோக்சபா அவைக்கு வந்தார். அப்போது, பாஜக எம்.பி.,கள் அனைவரும் எழுந்து நின்று ‛மோடி...மோடி...’ கோஷம் எழுப்பினர். தங்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியை பகிர்ந்த அவர்கள், ஆரவாரத்துடன் மோடியை உள்ளே வரவேற்றனர்.
இதோ அந்த வீடியோ...
மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்ட மோடி, தனது இருக்கைக்கு வந்ததும், அந்த வரவேற்பை ஏற்றுக் கொண்டு சிரித்தபடி அனைவருக்கும் வணக்கம் செலுத்திக் கொண்டார். மோடியை பாஜக மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,கள் வரவேற்ற நிகழ்வை, காங்கிரஸ் உள்ளிட்ட மற்றபிற எதிர்கட்சி எம்.பி.,கள் அமைதியோடு வேடிக்கை பார்த்தனர். பாஜக எம்.பி.,களின் ஆரவாரத்தால் லோக்சபா முழுவதும் ஒரே மோடி கோஷமாக இருந்தது.
கடந்த கூட்டத்தொடரில், 5 மாநில தேர்தலை முன்னிட்டு எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். அதற்கு பாஜகவும் பதிலடி அளித்தது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் நிறைவடைந்த நிலையில், இம்முறை எதிர்கட்சிகளின் எதிர்ப்பு எந்த மாதிரி இருக்கும், வெற்றியை வைத்து பாஜக எந்த மாதிரியான பதிலடி தரும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்