BSNL IPL Special: BSNL ரசிகர்களாக மாறும் IPL ரசிகர்கள்.. ஆமாங்க, அவங்க கொண்டுவந்துருக்கற பிளான் அப்படி...
ஐபிஎல் ரசிகர்கள் தங்கள் ரசிகர்களாக மாறும் அளவிற்கு ஒரு அற்புதமான டேட்டா பிளானை கொண்டுவந்துள்ளது பிஎஸ்என்எல். அது என்ன பிளான் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஐபிஎல் 18-வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், ஐபிஎல் ரசிகர்களுக்காக ஒரு ஸ்பெஷல் பிளானை கொண்டுவந்துள்ளது பிஎஸ்என்ல். இதனால், ஐபிஎல் ரசிகர்கள் பரவசமடைந்துள்ளனர். அது என்ன பிளான்.? பார்க்கலாம்...
குறைந்த விலையில் சேவைகளை வாங்கிவரும் பிஎஸ்என்எல்
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், அதாவது பாரத் சன்சார் நிகம் லிமிடெட், அதன் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் நெட்வொர்க் சேவைகளை வழங்கி வருகிறது. நீண்ட காலமாக 3ஜி சேவையிலேயே தேங்கியிருந்த பிஎஸ்என்எல், சமீபத்தில்தான் 4ஜி சேவையை கொண்டுவந்தது. தற்போது நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கத் தொடங்கியுள்ள அந்நிறுவனம், இதற்காக புதிதாக 75 ஆயிரம் 4ஜி டவர்களை நாடு முழுவதும் நிறுவி வருகிறது. இதன் மூலம் தடையற்ற நெட்வொர்க் மற்றும் டேட்டா சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
Just In




தனியார் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் போன்ற நிறுவனங்களின் ரீசார்ஜ் பிளான்களைவிட குறைந்த விலையில், அதிக பலன்களுடன் பிளான்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்ல். 4ஜி சேவை அறிமுகம் மற்றும் தனியார் நிறுவன ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்வு போன்ற காரணங்களால், ஏராளமான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல்லுக்கு மாறி வருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஒரு ஸ்பெஷலான ரீசார்ஜ் பிளானை தற்போது பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
ஐபிஎல் ரசிகர்களுக்காக ரூ.1-க்கு 1ஜிபி டேட்டா சிறப்பு ரீசார்ஜ்
இந்நிலையில், தற்போது கிரிக்கெட் ரசிகர்களுக்காக, குறிப்பாக ஐபிஎல் ரசிகர்களுக்காக ஒரு சிறப்பு ரீசார்ஜ் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபிஎல் என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம்தான். மைதானத்திற்கு செல்ல முடியாத ரசிகர்கள் பெரும்பாலும் தங்கள் மொபைல் போன்களிலேயே ஐபிஎல் போட்டிகளை கண்டு ரசிக்கின்றனர்.
அவர்களுக்காக, ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி என்ற கணக்கில், 251 ரூபாய்க்கு ஒரு சிறப்பு ரீசார்ஜ் திட்டத்தை பிஎஸ்என்எல் கொடுத்துள்ளது. அதன்படி, 251 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 251 ஜிபி டேட்டாவுடன், 60 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இதன்படி பார்த்தால், ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த பிளானை ரீசார்ஜ் செய்து, ஐபிஎல் ரசிகர்கள் தங்கள் மொபைல் போனிலேயே போட்டிகளை தங்கு தடையின்றி பார்த்து மகிழலாம்.
இந்த ரீசார்ஜ் திட்டத்தில் டேட்டா மட்டுமே கிடைக்கும். அன்லிமிடெட் கால்ஸ், எஸ்எம்எஸ் போன்ற எந்த வசதிகளும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.