பொதுவாக திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்ற கூற்று உள்ளது. அந்தக் கூற்றை பொய்யாகும் படி சில போலி திருமணங்கள் நடைபெற்று ஏமாற்றம் அடையபடி செய்கின்றன. இப்படி நடைபெறும் போலி திருமணங்களில் பெரும்பாலும் அதிகளவில் பெண்களே ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். பல ஆண்கள் தங்களுடைய திருமணத்தை மறைத்து பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி வருவார்கள். ஆனால் அதற்கு மாறாக ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒரே பெண் 8 ஆண்களை திருமணம் செய்து மோசடி செய்துள்ளார்.  யார் அவர் எப்படி பிடிப்பட்டார்?


ஹரியானா மாநிலம் பட்டியாலா காவல்துறைக்கு சில நாட்களுக்கு முன்பாக  பெண் ஒருவர் தனக்கு திருமணம் நடந்ததை மறைத்து சில ஆண்களை ஏமாற்றியுள்ளதாக புகார் ஒன்று வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த பெண்ணை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இதையடுத்து கடந்த வாரம் காவல்துறையினர் இந்தப் பெண்ணை கைது செய்துள்ளனர். அதன்பின்னர் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை வெளிவந்துள்ளன. 




அதன்படி அந்தப் பெண் ஹரியானா மாநிலத்தின் கைத்தால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. அத்துடன் இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது என்ற தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தன்னுடைய அம்மா மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து வேகமாக பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டியுள்ளார். அதற்காக சில ஆண்களை திருமணம் செய்து அவர்களிடம் பணத்தை பறிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இதுவரை அவர் 8 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் பணத்தை எடுத்து கொண்டு இவர் தற்போது தலைமறைவாக இருந்துள்ளார். அவரை காவல்துறையினர் தேடி கண்டுபிடித்துள்ளனர். 


இதன்பின்னர் அந்த பெண்ணிற்கு காவல்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனையில் மற்றொரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அந்தப் பெண்ணிற்கு ஹெச்ஐவி எய்ட்ஸ் நோய் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர் திருமணம் செய்த 8 பெரையும் அடையளம் கண்டறிந்து காவல்துறையினர் எய்ட்ஸ் நோய் தொடர்பான பரிசோதனையை செய்ய திட்டமிட்டுள்ளனர்.


காவல்துறை விசாரணையில் அந்தப் பெண் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு பெண் 8 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த ஆண்களை தேடி பரிசோதனை செய்யும் பணியில் காவல்துறையினர் ஈட்டுபட்டு வந்துள்ளனர். 


மேலும் படிக்க: BMW கார்.. கேக் வெட்ட ஐபோன்.. எம்.எல்.ஏ.மகனுக்கு எதிராக கொதிக்கும் இணையவாசிகள்