சமீபத்தில், ட்விட்டர் பயனர் ஒருவர் வித்தியாசமான திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு அதுகுறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். திருமணத்தில் என்ன வித்தியாசம் என்று யோசிக்கிறீர்களா? அது இறந்து போனவர்களுக்கு நடத்தப்பட்ட திருமணமாகும். 






Twitter thread மூலம் திருமண சடங்குகள் குறித்து யூடியூபர் ஆனி அருண் பகிர்ந்து கொண்டுள்ளார். அவரின் ஒவ்வொரு பதிவும் திருமணம் பற்றிய விசித்திரமான நிகழ்வை எடுத்துரைத்தது. தக்சின கன்னடத்தில் நடைமுறையில் உள்ள பாரம்பரியத்தை பயனர் விரிவாக விளக்கினார். அங்கு, பிறக்கும்போது இறக்கும் ஒருவரை, பிறக்கும்போது இறந்த மற்றொரு நபருடன் திருமணம் செய்து வைக்கிறார்கள். 


“நான் இன்று ஒரு திருமணத்தில் கலந்துகொள்கிறேன். இது ஏன் ஒரு ட்வீட்டிற்கு தகுதியானது என்று நீங்கள் கேட்கலாம். சரி, மணமகன் உண்மையில் இறந்துவிட்டார். மேலும் மணமகளும் இறந்துவிட்டார்.  சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் இறந்துவிட்டனர்" என ஆனி அருண் பதிவிட்டுள்ளார்.






திருமணமானது இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்படுகிறது. வழக்கமான திருமணத்தைப் போன்று அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்படுகிறது. "நிச்சயதார்த்தத்திற்காக இரண்டு குடும்பங்கள் ஒருவருக்கொருவர் வீட்டிற்குச் செல்வார்கள். திருமண ஊர்வலம் இருக்கும். இறுதியாக தாலி கட்டப்படும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


சடங்கின் ஓர் அங்கமாக, மணமகன் குடும்பம் மணமகள் அணியும் "தாரே புடவை" கொண்டு வருகிறார்கள். மணமகள் தயாரானவுடன், இதுபோல ஏழு சடங்குகள் நடத்தப்படுகிறது.


மணமகனும், மணமகளும் இறந்துவிட்டாலும், இறுதிச் சடங்கு போன்ற சூழல் அங்கு நிலவவில்லை என்று பயனர் குறிப்பிட்டுள்ளார். "இது மற்ற திருமணங்களைப் போலவே மகிழ்ச்சியானதாக நடத்தப்படுகிறது. எல்லோரும் நகைச்சுவைகளை சொல்லி கொண்டு சிரித்து கொள்கிறார்கள். மனநிலையை பாசிட்டிவாக வைத்து கொள்கிறார்கள்" என்று பயனர் பதிவிட்டுள்ளார்.


இந்த பாரம்பரியத்தின் மற்றொரு விதி என்னவென்றால், குழந்தைகள் மற்றும் திருமணமாகாதவர்கள் திருமணத்தைக் காண அனுமதிக்கப்படுவதில்லை. பின்னர், தான் முக்கிய சடங்கு இடம்பெறுகிறது. மணமகளுக்கு தாலி கட்டிய பிறகு திருமணம் முடிவடைகிறது.


திருமணம் முடிந்த பிறகு, மணமக்கள் கடவுள் மற்றும் பெரியவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதாக அது முடிகிறது. அது முடிந்ததும், வாழை இலையில் சுவையான உணவு பரிமாறப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண