Breaking News LIVE: பாட்னாவில் எதிர்க்கட்சிகள் நடத்தியது புகைப்பட அமர்வுதான் - அமித் ஷா சாடல்..!

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 23 Jun 2023 06:04 PM
எதிர்க்கட்சிகள் கூட்டம் குறித்து அமித் ஷா..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அதாவது ஜூன் 23ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை "புகைப்பட அமர்வு" என்று குறிப்பிட்டுள்ளார்.

சிம்லாவில் இரண்டாவது கூட்டம்..!

பாட்னாவில் 16 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற முதல் கூட்டம் நிறைவு 


எதிர்க்கட்சிகளின் 2வது கட்ட கூட்டம் இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் என அறிவிப்பு

16 கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பாட்னா கூட்டம் நிறைவு..!

பாட்னாவில் நடைபெற்ற 16 எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்குபெற்ற  கூட்டம் நிறைவடைந்துள்ளது.  

Breaking News LIVE: அன்பை பரப்பி மக்கள் ஒன்றிணைக்க உழைக்கிறது காங்கிரஸ் - ராகுல் காந்தி பேச்சு



Breaking News LIVE: 4 மாநில தேர்தல்களில் நிச்சயம் வெற்றிபெறுவோம் - ராகுல் காந்தி



Breaking News LIVE: புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடிய விஜய் - வீடியோவைப் பகிர்ந்து பூஜா ஹெக்டே நெகிழ்ச்சி



Breaking News LIVE:மாமன்னனுக்கு தடை கோரிய மனு - உதயநிதிக்கு நோட்டீஸ்



Breaking News LIVE: அமெரிக்க வெள்ளை மாளிகையில் அம்பானி!



Breaking News LIVE: பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்!

பாட்னாவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி  தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் மற்றும் ஜேஎம்எம் கட்சியின் செயல் தலைவர்  ஹேம்நாத் சோரன், உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சந்தா, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜிர்வால் உள்ளிட்ட பலர் பங்கேற்று உள்ளனர்.




 


Breaking News LIVE: இனி எந்த மாநிலத்திலும் பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றாது - ராகுல் காந்தி.!

பீகார் தலைநகர் பாட்னாவில் பாஜகவிற்கு எதிராக இன்று எதிர்கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 16 கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 

Breaking News LIVE: திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை..


திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் திருமதி மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகின்றனர்.   லஞ்ச ஒழிப்பு துறை DSP நாகராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட  குழு சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Breaking News LIVE: செங்கல்பட்டு அருகே பேருந்து கவிழ்ந்து பயணிகள் காயம்


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே புறவழிச்சாலையில் தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து - கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் இருவர் காயம் 

Breaking News LIVE : மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆமைகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆமைகள் பறிமுதல் - பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆமைகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றி நடவடிக்கை 

Breaking News LIVE : பாஜகவுக்கு எதிராக ஒன்று கூடும் எதிர்க்கட்சிகள் கூட்டம்


பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று எதிர்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

Background

Petrol Diesel Price:சென்னையில் விலை மாற்றமின்றி 400-வது நாளை நெருங்கி வரும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரத்தைக் காணலாம்.






உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (ஜூன் 23) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 398 நாட்களாக இன்று விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.





- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.