Breaking News LIVE: செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா? - உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்க்கும் மாவட்ட நீதிமன்றம்..!

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 15 Jun 2023 03:55 PM
உயர்நீதிமன்ற உத்தரவிற்கு பின் ஜாமின் மனு மீது விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு, ஜாமின் மனு மீது விசாரணை நடத்தப்படும் என, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு

காணொலி வாயிலாக ஆஜராகும் செந்தில் பாலாஜி..!

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கக்கோரும் அமலாக்கத்துறை மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சற்று நேரத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது, செந்தில் பாலாஜியை காணொலி வாயிலாக  நீதிபதி முன் ஆஜர்படுத்த அமலாக்கத்துறை முடிவு. இதற்காக அமைச்சர் சிகிச்சை பெற்று வரும்  ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அதிகாரிகள் வருகை

தவறான சிகிச்சையால் குழந்தை பலி?

கடலூர் மாவடத்தில் தெற்குமேல்மாம்பேட்டையை சேர்ந்த 4 வயது குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததால் உயிரிழந்ததாக புகார். மருத்துவரை கைது செய்யக்கோரி சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் போராட்டம். பெண் குழந்தை உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்த மருத்துவத்துறைக்கு ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவு

அமைச்சரை தீவிரவாதிபோல அடைத்துவைத்து விசாரிக்கவேண்டிய அவசியம் என்ன? முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

அமைச்சரை தீவிரவாதிபோல அடைத்துவைத்து விசாரிக்கவேண்டிய அவசியம் என்ன? முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

பிரிஜ்பூஷன் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

மல்யுத்த வீரர்கள் முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ்பூஷன் சிங் மீது டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என குற்றப்பத்திரிகையில் தகவல்.

அண்ணாமலை ஆஜராக உத்தரவு..

டி.ஆர். பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜுலை 14ல்  ஆஜராக அண்ணாமலைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில்  அவதூறு கருத்து கூறியதாக தொடரப்பட்ட வழக்கில், சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன்.

Breaking News LIVE: அமர்நாத் யாத்திரை ஜூலை 1-ல் தொடங்குகிறது

அமர்நாத் யாத்திரை ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை 62 நாட்கள் நடைபெறுகிறது

Breaking News LIVE: நீட் எழுதிய மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை

நீட் எழுதிய மாணவர்களுக்கு தொலைப்பேசியில் அழைத்து உளவியல் ஆலோசனை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

Breaking News LIVE : அமர்நாத் யாத்திரை- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ளதையொட்டி ஜம்மு காஷ்மீரில் முழுவீச்சில்  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது

Breaking News LIVE: பிரிஜ் பூஷன் மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீதான பாலியல் வழக்கில் இன்று குற்றப்பதிரிகை தாக்கல் செய்யப்படுகிறது

Breaking News LIVE: ஐ.நா சபையில் இந்தியா தீர்மானம்

ஐ.நா அமைதிப்படையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்க ஐ.நா சபையில் இந்தியா தீர்மானம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் கைதி எண் 1440 வழங்கப்பட்டுள்ளது - புழல் சிறை நிர்வாகம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  புழல் சிறையில் கைதி எண் 1440 வழங்கப்பட்டுள்ளது - புழல் சிறை நிர்வாகம் 

Breaking News LIVE: செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலுக்கு எதிரான மனு தள்ளுபடி

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு 

நெல்லை தலையணை சுற்றுலா பகுதிக்கு செல்லத் தடை

நெல்லை தலையணை சுற்றுலா பகுதிக்கு செல்லத் தடை : பராமரிப்பு பணிகளுக்காக தடை என தகவல்

Breaking News LIVE: செந்தில் பாலாஜி இதயத்தில் 90% அடைப்பு - மருத்துவ அறிக்கையில் தகவல்

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் இதயத்தில் 90% அடைப்பு இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தகவல் - அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய ஏற்கனவே மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

Breaking News LIVE: கருணாநிதி நூற்றாண்டு விழா -கிண்டி பல்நோக்கு மருத்துவமனை இன்று திறப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவ்ன் ஒரு பகுதியாக கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இன்று திறப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 

Breaking News LIVE: செந்தில் பாலாஜி தொடர்பான 3 மனுக்கள் மீது இன்று தீர்ப்பு

நீதிமன்ற காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு, வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது தொடர்பான மனு, விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனு ஆகியவை மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. 

Background

சென்னையில் ஓராண்டுக்கும் மேலாக ஒரே நிலையில் நீடித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் இன்றைய நிலவரத்தை காணலாம். 


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (ஜூன் 15) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 390 நாட்களை கடந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.


இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.