Breaking News LIVE: இனி விசாரணை மேற்கொள்ள மாநில அரசின் முன் அனுமதி அவசியம் - தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பு மாநில அரசின் முன் அனுமதியை பெறுவது அவசியம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பு மாநில அரசின் முன் அனுமதியை பெறுவது அவசியம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Myladuthurai Alcohol Tasmac : டாஸ்மாக் மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில், தனிப்பட்ட பிரச்சினையில் மதுபானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்ததாக பழனி குருநாதனின் சகோதரர்கள் மனோகர், பாஸ்கர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பு.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், கூடுதலாக ஒரு அதிகாரியும், 5 துணை ராணுவத்தினரும் வந்துள்ளனர்.
அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது என தனது கண்டன உரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதியம் இரண்டு மணியளவில் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் தொடங்கப்பட்ட ரெய்டு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. இந்நிலையில் இந்த ரெய்டு முடிந்து அங்கிருந்து அமலாக்கத்துறையினர் வெளிவருகின்றனர்.
ரெய்டுகளை கொண்டு நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயலும், மத்திய அரசின் இந்த செயல் அரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகல்ல என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
தலைமச் செயலகத்தில் சோதனை நடத்தவேண்டுமானால், தலைமைச் செயலரிடம் அனுமதி பெறவேண்டும் ஆனால், அப்படி எந்த அனுமதியும் பெறாமல் சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் லேசான நில அதிர்வு : காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து டெல்லி மற்றும் வட மாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்திற்கு வந்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, அமைச்சர் என்னை கதவில் வந்து சந்திக்க அனுமதி அளிக்க அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமலாக்கத்துறை சோதனை நடத்திவரும் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் வருகை புரிந்துள்ளனர்.
சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
கரூரில் எங்கெங்கு சோதனை
1.ராமேஸ்வரப்பட்டி பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு.
2.கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் தம்பி அசோக்குமார் வீடு.
3.ராயனூர் பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் மணி என்ற சுப்பிரமணியின் வீடு.
4.வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள சண்முகம் என்பவர் வீடு.
5.மண்மங்கலம் தாலுக்கா பகுதியில் அமைந்துள்ள அசோக்குமாரின் மாமியார் வீடு.
6.வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள கார்த்தி என்பவர் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது கூடுதலாக ஈரோடு செங்கோடம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் சரக்கு வாகன் ஒப்பந்ததார் சச்சிதானந்தன் வீட்டிலும் கரூர் செங்குந்தபுரம் ஆடிட்டர் சதீஷ் வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரின் அறையிலும் அலமாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். தலைமை செயலகத்தின் உள்ளேயே அமைச்சரின் அறையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மற்றும் வட இந்தியாவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நியூ அஷ்யூரன்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “உள்ளூர் மொழிகள் மற்றும் கலாசாரங்களை மதிக்கும் ஒரு மாறுபட்ட மற்றும் அமைதியான பணியிடத்தை மேம்படுத்துவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். நமது மகத்தான நாட்டின் பரப்பளவு முழுவதும் உள்ள செழுமையான கலாச்சார மரபு மற்றும் மொழியியல் வகைகளுடன் நாங்கள் முழுமையாக இணைந்துள்ளோம் மற்றும் மரியாதை கொண்டுள்ளோம். தற்செயலாக, உங்கள் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
நியூ அஷ்யூரன்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “உள்ளூர் மொழிகள் மற்றும் கலாசாரங்களை மதிக்கும் ஒரு மாறுபட்ட மற்றும் அமைதியான பணியிடத்தை மேம்படுத்துவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். நமது மகத்தான நாட்டின் பரப்பளவு முழுவதும் உள்ள செழுமையான கலாச்சார மரபு மற்றும் மொழியியல் வகைகளுடன் நாங்கள் முழுமையாக இணைந்துள்ளோம் மற்றும் மரியாதை கொண்டுள்ளோம். தற்செயலாக, உங்கள் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜகவுடனான கூட்டணி குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுப்போம் என கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
நேற்று அதாவது ஜூன் 12ஆம் தேதி மாலை 5.50 மணி அளவில் அலுவலகத்திற்குள் புகுந்து கதவை சாத்திய அடையாளம் தெரியாத நபரை
சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த விஜயன் என்ற நபர் வெளியேற்றினார். இரவு 8.30 மணி அளவில் மர்மநபர் புகுந்தது குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இந்நிலையில் அண்ணா சிலை சிக்னல் அருகே அந்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு. அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் உடலை கைப்பற்றி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு புதிய தலைமை தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகில் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயளாலர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேச எந்த தராதரமும் யோக்கிதையும் அண்ணாமலைக்கு இல்லை என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில், ஊழலைப் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது கவுன்சிலராகவோ இல்லாத அண்ணாமலை மீது அவரது சொந்த கட்சிக்காரர்களே ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். சமுதாயத்தில் சாராயம் விற்பவர்கள், கொலை, கொள்ளை, பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள், ஏழை மக்களை ஏமாற்றி பண மோசடி செய்பவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கட்சியில் பொறுப்பு வழங்குபவர் தான் இந்த அண்ணாமலை. அப்படிப்பட்ட அண்ணாமலை எங்களின் ஆளுமை மிக்க தலைவரைப் பற்றி பேச தகுதியற்றவர் என கூறினார்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறையோ அல்லது வருமானவரித்துறையோ அவர்கள் கைப்பற்றப்படும் ஆவணங்களுக்கு விளக்கம் அளிக்கத்தயார் எனவும், மேலும், இந்த சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத்தயார் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தனது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்த வந்துள்ளனர் என்பதை அறிந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது காலை நேர நடை பயிற்சியை பாதியிலேயே நிறுத்தி விட்டு, உடனே தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “ அமலாக்கத்துறையினர் எந்த நோக்கத்துடன் வந்துள்ளனர் எனத் தெரியவில்லை, பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும், எனக்கு இந்த சோதனை குறித்து எந்த முன் தகவலும் வரவில்லை. அமலாக்கத்துறையோ அல்லது வருமானவரித்துறையோ அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார். மேலும், கைப்பற்றப்படும் ஆவணங்களுக்கு விளக்கம் அளிக்கவும் தயார்” என கூறினார்.
கரூரில் தற்போது அமலாக்கத்துறை ஐந்து இடங்களில் சோதனையை தொடங்கியுள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரியுடன் மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
1. ராமேஸ்வர பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு.
2. ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் வீடு.
3. ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு
4. வெங்கமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் அமலாக்க துறையினர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
Background
Petrol, Diesel Price: சென்னையில் ஓராண்டுக்கும் மேலாக ஒரே நிலையில் நீடித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் இன்றைய நிலவரத்தை காணலாம்.
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (ஜூன் 13) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 388 நாட்களை கடந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -