Breaking News LIVE : சேலம் பட்டாசு ஆலை வெடி விபத்து - 8 ஆக உயர்வு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

கீர்த்தனா Last Updated: 11 Jun 2023 07:44 PM
சேலம் பட்டாசு ஆலை வெடி விபத்து - 8 ஆக உயர்வு

சேலத்தில் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

சேலம் பட்டாசு ஆலை வெடி விபத்து - 8 ஆக உயர்வு

சேலத்தில் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

Breaking News LIVE : தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பு பறிபோனதற்கு திமுகவே காரணம் - அமித்ஷா குற்றச்சாட்டு

தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை தமிழ்நாடு இரண்டு முறை தவறவிட்டுள்ளது, அதற்கு திமுக தான் காரணம் என தமிழ்நாடு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். 

Breaking News LIVE : வெளிநாட்டுப் பயணத்தை விமர்சிப்போருக்கு முதலமைச்சர் பதில்

தமிழ்நாட்டை பாழ்படுத்த நினைக்கும் கூட்டம் வெளிநாட்டுப் பயணத்தை கொச்சைப்படுத்துகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Breaking News LIVE:துரை வைகோ விவகாரம்- மல்லை சத்யா விளக்கம்

துரை வைகோ சாத்தூர் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக திருப்பூர் துரைசாமியிடம் பேசவில்லை என மல்லை சத்யா விளக்கம் அளித்துள்ளார்

Breaking News LIVE: சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்தை திறந்து வைத்த முதலமைச்சர்!

சேலத்தில் 96 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தப்  புதிய ஈரடுக்கு பேருந்து நிலையத்துக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Breaking News LIVE: அமித்ஷா வருகையின்போது மின்தடை ஏற்பட்டது ஏன்... மின்வாரியம் விளக்கம்!

போரூர் துணை மின்நிலைய உயர் மின் அழுத்தப்பாதையில் ஏற்பட்ட மின் துண்டிப்பு காரணமாகவே நேற்றிரவு அமித்ஷா வருகையின்போது மின்தடை ஏற்பட்டதாக, மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி விளக்கம் அளித்துள்ளார்.

Breaking News LIVE: அமித்ஷாவின் வருகை கட்சி சார்ந்தது மட்டுமே - அண்ணாமலை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழ்நாடு வருகை கட்சி சார்ந்தது மட்டுமே என, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE: மு.கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை திறப்பு.. திறந்து வைத்த முதலமைச்சர்!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம், அண்ணா பூங்கா வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Breaking News LIVE: பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை

தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று தென் சென்னை பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Breaking News LIVE: லாலு பிரசாத் பிறந்தநாள்.. முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவரான லாலு பிரசாத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE: தேசிய பயிற்சி மாநாடு: பிரதமர் தொடங்கி வைப்பு

டெல்லி பிரகதி மைதானத்தில் முதலாவது தேசிய பயிற்சி மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கும் நிலையில், இந்த மாநாட்டில் 1500 பிரநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

Breaking News LIVE: காரைக்கால் எர்ணாகுளம் ரயில் மீது  கல்வீச்சு!

திருச்சி அருகே சென்று கொண்டிருந்த காரைக்கால் - எர்ணாகுளம் விரைவு ரயிலில் மர்மநபர்கள் கல்வீச்சு நடத்தியதில் பயணி ஒருவர் காயமடைந்தார்.

Breaking News LIVE: ஜூன்.15இல் அதி தீவிர புயலாக உருவெடுக்கும் பிப்பர்ஜாய்!

அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் பிப்பர்ஜாய் மிக தீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்று, வரும் 15ஆம் தேதி கரையைக் கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுபெறும்.


 

Background

சென்னையில் ஓராண்டுக்கும் மேலாக ஒரே நிலையில் நீடித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் இன்றைய நிலவரத்தை காணலாம்.


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (ஜூன் 11) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 386 நாட்களை கடந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.


இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.