Breaking LIVE: உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பிரிப்பது ஆரிய மாடல்; எல்லோருக்குமானதுதான் திராவிட மாடல் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு கீழே உடனுக்குடன் காணலாம்.
MK Stalin Speech: உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பிரிப்பது ஆரிய மாடல்; எல்லோருக்குமானதுதான் திராவிட மாடல் - முதலமைச்சர் ஸ்டாலின்
Roger Federer Retirement: ஓய்வை அறிவித்த டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்! நெகிழ்ச்சி பதிவு..
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள், நம் நாட்டில் கல்வியைத் தொடர முடியாது - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் கடந்தமுறை அதிமுக அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
காய்ச்சல் வரும் அனைவருக்கும் பாதிப்பு இல்லை. உரிய சிகிச்சை எடுத்தால் உயிர் இழப்பை தடுக்கலாம் - பொது சுகாதார இயக்குனர் செல்வ விநாயகம்
ஐம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக கட்டிட பணிக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகம் ரூ.70.57 கோடி மதிப்பில் 6 தளங்களுடன் கட்டப்பட உள்ளது
ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 61.60க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 61 ஆயிரத்து 100க்கு விற்கப்படுகிறது.
தங்கம் கிராமிற்கு ரூபாய் 21 குறைந்து, ரூபாய் 4,680க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 168 குறைந்து ரூபாய் 37,440க்கு விற்கப்படுகிறது.
அதேபோல, 24 காரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 5082க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 40,656க்கு விற்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 282 பேருக்கு இன்புளூயன்ஸா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பபிரமணியன் கூறியுள்ளார்.
இந்தியாவில் ஒரேநாளில் 6,422 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,16,479 ஆக அதிகரித்துள்ளது
நாடு முழுவதும் கொரோனாவுக்கு மேலும் 34 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 5,28,250 ஆக உயர்ந்துள்ளது - மத்திய அரசு
தமிழகத்தில் இன்புளுன்ஸா காய்ச்சலால் 252 குழந்தைகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் : மா.சுப்பிரமணியன்
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடக்கப்பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டார்.
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் அண்ணா சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் மரியாதை செலுத்தினார்.
பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை இன்று மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
எஃப் 16 போர் விமானங்களை சீரமைக்க பாகிஸ்தானிற்கு அமெரிக்கா நிதியுதவி வழங்க கூடாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்.
ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு பயணம் செய்ய உள்ளார். ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீனா அதிபர் ஸி ஜிங்பிங்கை சந்தித்து பேச உள்ளதாக தகவல்.
தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுகவின் தொண்டர்களின் வழியில் தான் தன்னுடைய பயணம் இருக்கும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
நரிக்குறவ மக்களுக்கு பழங்குடியினர் தகுதி வழங்கிய மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Background
சென்னையில் 117வது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 108 வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர் 15) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில்ன் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -