Breaking News Tamil LIVE: அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா..!
Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு, இந்தியா,உலகம்,விளையாட்டு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் உடனுக்குடன் தகவல்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விசைத்தறியாளர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, நாளை முதல் ஜவுளி உற்பத்தி செய்ய முடிவு. மேலும் ஜனவரி மாதம் வரை நூல் இறக்குமதிக்கு தற்காலிகமாக வரியை நீக்க மத்திய அரசுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை.
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை ஜூன் 9 வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு பெற்றது.
தமிழ்நாட்டில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பாஜகவினர் சட்டப்பேரவையை நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெரியார் பல்கலைக் கழகத்தின் தொலைதூர கல்வி செல்லாது என்று யுஜிசி அறிவித்துள்ளது. முறையாக அனுமதி பெறாமல் ஆன்லைன் வகுப்புகளை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமீறல் தொடர்பாக விசாரணை செய்யப்படும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
8 ஆண்டுகள் நிறைவுசெய்த பாஜக அரசு... இன்று காணொளி மூலம் முதலமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாடல் !
உலகில் 53.18 கோடி பேருக்கு கொரோனா; 63.11 லட்சம் பேர் உயிரிழந்தனர். 50.28 கோடி பேர் குணமடைந்தனர்
டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டாவது நாளாக இன்று ஆய்வு செய்ய உள்ளார்
அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்
சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Background
ஜாதி இப்போதும் உள்ளது இனிமேலும் இருக்கத்தான் போகிறது ஜாதியின் பெயரை வைத்து வீதியில் உள்ள பெயர்களை அழிப்பது கண்டனத்துக்குரியது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று முதல் முறையாக விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை புரிந்த அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்திற்கு அருகில் உள்ள அம்பேத்கர்-பெரியார்-காரல் மார்க்ஸ் ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,
இதையடுத்து பாமக பயிலரங்கதிற்க்கு வெளியிலுள்ள கொடிக்கம்பத்தில் பாமக கொடியை ஏற்றி வைத்து அதன்பிறகு தைலாபுரம் தோட்டத்தில் புனரமைக்கப்பட்ட அரசியல் பெயர் அங்கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இதனையடுத்து பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட எடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமகவின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார், அதன்பிறகு பயிலரங்கத்தில் பாமக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனையடுத்து செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-
தமிழகத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் பிரச்சனை இளைஞர்களின் போதைப்பழக்கம், கலாச்சார சீரழிவுகள், மற்றும் ஆன்லைன் கேம்பிலிங் இது அடுத்த தலைமுறையைச் சார்ந்த பிரச்சனைகள், இதில் தமிழக அரசு தனி கவனம் செலுத்தி உடனடியாக போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி கொண்டுள்ள இளைஞர்களை காப்பாற்ற வேண்டும், அதற்கு அடித்தளமாக இருக்கின்ற போதைப் பொருட்களை விற்பனை செய்கின்றவர்கள் மீதி குண்டர் சட்டம் போன்ற கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு கட்டுபடுத்த வேண்டும்.
காவல்துறை நினைத்தால் இதை உடனடியாக தடுத்து நிறுத்தலாம், ஆனால் அவர்களால் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது, மாணவ மாணவிகள் இடத்தில் இந்த போதை பழக்கமானது அதிகமாகி வருகிறது, திமுக அரசு வெற்றி பெறுவதற்கு முன்பாக கொள்கை ரீதியாக பூரண மதுவிலக்கை அமல் செய்வதாக கூறினார்கள், ஆனால் தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக இதுவரை அதை செய்யவில்லை, அரசு மீதமுள்ள நான்காண்டுகளில் மதுவை ஒழிக்க வேண்டிய செயல் திட்டத்தை முன்வைக்க வேண்டும், இந்தியாவிலேயே அதிக அதிகம் மது அருந்துகின்ற மாநிலமாக தமிழகம் விளங்குகிறது, தமிழகத்தில் நடைபெறுகின்ற அனைத்து சமூக விரோத செயல்களுக்கும் அடித்தளமாக மது விளங்குகிறது, சாலை விபத்துகளுக்கும் அடித்தளமாக அமைந்து உள்ளது, ஒரே அடியாக மதுவை ஒழிக்க முடியவில்லை என்றாலும் அதை படிப்படியாக குறைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு அடுத்தபடியாக, ஆன்லைன் கேம்பிலிங் இதனால் தினமும் இரண்டு அல்லது மூன்று இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், இதற்காக விழிப்புணர்வு வீடியோ தமிழக காவல்துறை சார்பில் வெளியிடப்படுகிறது, இதைத்தான் பாமக 3 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது, இதை தடுப்பதற்கான சட்டத்திருத்தத்தை சாதாரணமாக கொண்டு வர முடியும் ஆனால் இதற்கு ஏன் அரசு தயங்குகிறது என தெரியவில்லை, சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் கேம்பிலிங்கால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 10 பேருக்கு மேல் கொலை செய்யப்பட்டுள்ளார்கள், மிக மோசமான ஒரு சமூகப் பிரச்சினையாக கேம்பிலிங் மாறியுள்ளது எனவே அரசு உடனடியாக சட்டத் திருத்தத்தை கொண்டு வந்து இதற்கு முழு தடை விதிக்க வேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -