Breaking News Tamil LIVE: சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்

Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு, இந்தியா,உலகம்,விளையாட்டு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் உடனுக்குடன் தகவல்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Continues below advertisement

LIVE

Background

பிரபல பாலிவுட் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் - KK என பிரபலமாக அறியப்பட்டவர். அவருக்கு வயது 53. நேற்று இரவு கொல்கத்தாவில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்றபோது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல பிரபலங்கள் பாடகர் KKக்கு சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

தெற்கு கொல்கத்தாவில் உள்ள நஸ்ருல் மஞ்சில் நிகழ்ச்சியின் போது கே.கே உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர்.

பன்முகப் மொழிகளில் பாடும் வல்லமை பெற்ற கேகே, ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். ஓம் சாந்தி ஓம் திரைப்படத்தின் 'அன்கோன் மே தெரி', 'ஜரா சா' (ஜன்னத்), 'குதா ஜானே' (பச்னா ஏ ஹாசினோ) மற்றும் 'தடப் தடப்' (ஹம் தில் தே சுகே சனம்) போன்ற பிரபலமான பாலிவுட் பாடல்களுக்காக அவர் மிகவும் பிரபலமானவர்.

மறைந்த பாடகருக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “கேகே என்று அழைக்கப்படும் பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் அகால மறைவு வருத்தமளிக்கிறது. அவரது பாடல்கள் அனைத்து வயதினரையும் கவர்ந்த பலவிதமான உணர்ச்சிகளை பிரதிபலித்தன. அவரது பாடல்கள் மூலம் நாம் எப்போதும் அவரை நினைவில் கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி,” என்று பதிவிட்டுள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
16:51 PM (IST)  •  16 Jun 2022

அமலாக்கத்துறை சம்மன்: அவகாசம் கோரினார் ராகுல் காந்தி

ராகுல் காந்தியை விசாரிப்பதற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், ஆஜராவதற்கு கால அவகாசம் கோரியுள்ளார் ராகுல்.

14:04 PM (IST)  •  01 Jun 2022

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ராகுல் காந்தி நாளையும் சோனியா காந்தி ஜீன் 8ஆம் தேதியும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது

13:53 PM (IST)  •  01 Jun 2022

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சோனியா காந்தி நாளையும் ராகுல் காந்தி ஜீன் 3ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது

12:38 PM (IST)  •  01 Jun 2022

Breaking News Tamil LIVE: தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை-வானிலை ஆய்வு மையம் !

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

12:15 PM (IST)  •  01 Jun 2022

ராஜ்யசபா தேர்தல் : அரசியல் கட்சியினர் வேட்பு மனுக்கள் ஏற்பு..

ராஜ்யசபா தேர்தல் : அரசியல் கட்சியினர் வேட்பு மனுக்கள் ஏற்பு..

11:01 AM (IST)  •  01 Jun 2022

கல்வி அமைச்சர்கள் மாநாடு - தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு

குஜராத்தில் நடைபெறும் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு  செய்துள்ளது. இன்று மற்றும் நாளை குஜராத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் இருந்து அழைப்பு வந்தபோதும் அதில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். 

10:46 AM (IST)  •  01 Jun 2022

தஞ்சையில் நகை மொத்த வியாபாரியிடம் இருந்து 6 கிலோ 200 கிராம் தங்க நகை மற்றும் ரூ.14 லட்சம் ரொக்கம் கொள்ளை.

தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் நேற்றிரவு உணவருந்த வந்தபோது பின்தொடர்ந்து ஒரே மாதிரியான உடை அணிந்த 9 பேர் செய்த கொள்ளை. 2 தனிப்படை அமைத்து விசாரணை.

10:44 AM (IST)  •  01 Jun 2022

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் 71 பேர் ஆஜர்..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கு தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் 71 பேர் ஆஜர். 

10:42 AM (IST)  •  01 Jun 2022

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை

கொரோனா அதிகரித்து வரும்  நிலையில் மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு உள்பட கொரோனா அதிகரித்து வரும் மாவட்டங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

09:06 AM (IST)  •  01 Jun 2022

Breaking News Tamil LIVE: இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,745ஆக உயர்வு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,745 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

08:28 AM (IST)  •  01 Jun 2022

10, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்!

தமிழ்நாட்டில் 10, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. 17 லட்சம் மாணவர்கள் எழுதிய 1.87 கோடி விடைத்தாள்களை திருத்த இருக்கின்றனர். 

07:59 AM (IST)  •  01 Jun 2022

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.134 குறைவு..!

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.134 குறைந்து ரூ. 2,373 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

07:46 AM (IST)  •  01 Jun 2022

பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 4000 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை தலைமை செயலகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற அண்ணாமலை உள்பட 4000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

07:43 AM (IST)  •  01 Jun 2022

இலங்கையில் இருந்து மேலும் 3 பேர் தமிழ்நாடு வருகை..!

இலங்கையில் இருந்து வந்த மேலும் 3 பேர் ராமேஸ்வரம் அருகே உள்ள கோதண்டராமன் கோயிலில் தஞ்சமடைந்துள்ளனர். 

07:40 AM (IST)  •  01 Jun 2022

நடப்புச் சாம்பியன் ஜோகோவிச்சை வீழ்த்தி 15-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய நடால் !

பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி 15-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார் நடால்.